திருமதி.S.D.சாந்தா சிவம் நம் எண்ணங்களில் தூய்மையும் எளிமையும் இருந்தால் அசுத்தங்களினால் நமக்கு எந்தத் தீமையும் ஏற்படாது. பலரது வீடுகளில் நிலைக்கண்ணாடியானது ஷேவிங் க்ரீம், பவுடர், சாந்து, ஸ்டிக்கர் பொட்டு என பலவிதப் பொருட்களால் அழுக்காகி தூசி படர்ந்து காணப்படும், அவர்களின் மனதைப்போல. நிலைகண்ணாடியைப் பளிச்சென வைக்காதவர்கள் அவர்களின் மனதையும், எண்ணங்களையும் தெளிவாக, சுத்தமாக வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஒரு மனிதர் தன் எண்ணம் எப்படியோ அதே எண்ண அடிப்படையில்தான் தன்னைச் சார்ந்தவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுகிறான். பாழ்பட்ட மனம்
திருமதி.S.D.சாந்தா சிவம் எந்நேரமும் நீங்கள் சந்தோஷமாயிருக்க விரும்புகிறீர்களா? இரகசிய வழி ஒன்று உண்டு. அதுதான் உழைப்பு. அதிகமாக உழைத்து, கடினமான வேலையைச் செய்கிறவர்கள் தாமதமானாலும், புகழின் உச்சியை அடைகிறார்கள். அந்த மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்து அவர்களைத் திருப்தி கொள்ள வைக்கிறது. அப்பா சைக்கிள் ஓட்டுவது, அசாதாரணமாகத் தெரிந்த சிறுவனுக்கு, அவன் பெடல் மிதிக்கப் பழகி ஓட்டக் கற்றுக்கொண்டதும் சாதாரணமாகி விடுகிறது. அட ஓட்டக் கற்றுக்கொண்டாயா! என நாம் ஆச்சரியமாக வினவியதும், அவனுக்குப் பெருமிதமான புன்சிரிப்பு இதழ்களில் இழையோடும்.
திருமதி.S.D.சாந்தா சிவம் காந்தியடிகளுடன் பல தலைவர்களும் சேர்ந்து போராடி ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டுக்கொடுத்த சுதந்திரத்தை, ‘சுதந்திரம்’ என்ற வார்த்தையைப் பலரும் பல விதங்களில் உபயோகப் ‘படுத்துகிறார்கள்’. பல குடும்பங்களில் ஒருவரின் தவறான விருப்பத்தை சற்று மாற்றியமைக்க முயற்சித்தால் தந்தி மாதிரி டக்கென்று கூறும் வார்த்தை “எனக்கு சுதந்திரமில்லையா?” என்பது. மகாத்மாவை மறக்கக்கூடாது என்பதற்காக இந்த வார்த்தையை உபயோகிக்கிறார்களோ என்று சந்தேகம் வரும்படி பலரும் பல சமயங்களில் இந்த வார்த்தைகளோடு போர்க்கொடி தூக்கிவிடுகிறார்கள். எந்த சமயத்தில் எதற்காக உபயோகிக்கவேண்டும் என்ற
திருமதி.S.D.சாந்தா சிவம் நாம் பிறந்ததிலிருந்து நம்மை சுற்றியுள்ள பழக்க வழக்கங்களினால் நம் சுபாவங்கள் மாறுபடுகிறது. ஒரு மனிதன் சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்டு அதிலிருந்து கற்றுக்கொண்ட பாவனைகள் மற்றும் வெளித் தோற்றங்களுக்கு நாம் சுபாவம் என்ற முத்திரையை குத்திவிடுகிறோம். நமது மோசமான சுபாவங்களை நல்ல பல செயல்களால் திருத்திக்கொள்ள முடியும். நாம் ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது, அவரின் நடை, உடை, பாவனைகள் எல்லாமே எனக்கு பிடித்திருக்கிறது என்றோ, பிடிக்கவில்லை என்றோ சொல்கிறோம். எதனால் பிடிக்கிறது என்கிறோம். அடக்கமான தாழ்ந்த குரலில்
திருமதி.S.D.சாந்தா சிவம் நம்மிடையே பிரியமாக இருக்கிற ஒருவர் நம் ஸ்னேகத்தைத் தவிர்க்கிறார் என்றால் நம் அன்பை உள் கடந்து நோக்கித் தவறு எங்கே என ஆராயவேண்டும். எப்பவுமே எதைப்பற்றியாவது கவலைப்படுவதையே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக நினைத்துவரும் பலர், திடீர் சந்தோஷம் கொண்டால் இந்த சந்தோஷத்திற்கு காரணம் யார் என்பதையும் சற்றே சிந்திக்கவேண்டும். கவலைப்படும்போது மட்டும் கடவுளைத் துணைக்கழைக்கும் நாம், சந்தோஷம் வந்தடைந்த அடுத்தகணமே ஆறதலுக்காக ஆண்டவனை நினைத்ததை மறக்கிறோம். சரி ஆண்டவனை மறப்பது போகட்டும், யாரால் இந்த