சோம்பல் – சாம்பல்

திருமதி.S.D.சாந்தா சிவம் எதையுமே செய்யமுடியாமல் உட்கார்ந்திருப்பவர்களைக் கூர்ந்து கவனித்தால் வேடிக்கையாக இருக்கும். ‘நான் இந்த உலகத்தில் எல்லாவற்றையுமே முடித்துவிட்டேன். எனக்கென்று எந்த வேலையுமே இல்லை’, என்பதுபோல் உட்கார்ந்திருக்கும் அனைவரையும் பார்த்தால், இவர்களையெல்லாம் ஜப்பானுக்கு அனுப்பினாலாவது திருந்துவார்களா? என்று எண்ணத் தோன்றும். எத்தனையோ வேலைகள் தவணை வாங்கிக் கொண்டு முடங்கிப்போய் கிடக்கும். அதைச் செய்ய மனமில்லாது சோம்பி உட்கார்ந்திருப்பார்கள். எதையாவது செய்யலாமில்லையா? வெறுமனே உட்கார்ந்து அரட்டையில் பொழுதைப்போக்கும் இவர்களைக் கண்டால் எதையாவது செய்யுங்களேன் என்ற் விரட்டத்தோன்றும். மூளைக்கும், உடலுக்கும்

[ச]மையல்

திருமதி.S.D.சாந்தா சிவம் நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த வார்த்தையைச் சொல்லத் தவறுவதில்லை. அது “சமையல்”. “சமையல் ஆயிடிச்சா?”, “சமைச்சிட்டேன் சாப்பிடவாங்க” என்ற வார்த்தைகள் ஒரு கவர்ச்சியான மையல் கொள்ளும் வார்த்தைதான். நான் சுமாரா சமைப்பவள் என்றாலும் சமையல் குறிப்பு எல்லாம் தந்து உங்களை சோதிக்க மாட்டேன். படிக்காமல் பக்கங்களையெல்லாம் புரட்டிவிடாதீர்கள். பல சலுகைகள், மரியாதையுடன் கூடிய மிடுக்கான தோற்றத்திற்கு சுத்தமான உடை, போன் வசதி என பலவும் கிடைக்கும்போது சமைப்பவரின் மனம் குதூகலமாகிறது. பல விஐபிக்கள்

சோதனை – சாதனை

திருமதி.S.D.சாந்தா சிவம் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்? சந்தோஷமாகவா? இல்லை துன்பமாகவா? இப்படி ஒரு கேள்வி எழுந்தால், வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் சொல்வார்கள். எப்படிங்க அது சாத்தியமாகும்? கவலை, துன்பம், சோதனை இவையெல்லாம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டால்தானே சந்தோஷம் எப்படியிருக்கும் என யோசிக்கவாவது முடியும். கவலை, துயரம் என்ற சோதனைகளுக்குட்பட்டால்தான் கவலை, சந்தோஷம் என்ற இரண்டு முரன்பாடுகளின் வேற்றுமை தெரியும். வறுமையை அனுபவித்தால்தான் செல்வாக்கின் சிறப்பு

[பு]தையல்

திருமதி.S.D.சாந்தா சிவம் பெண் என்பவள் ஒரு புதையலுக்குச் சமமானவள். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் நிறைய திறமைகள் இருக்கிறது. அதை அவள் வெளிக்கொணரும் போதுதான் பல தடைகளால் சூழப்படுகிறாள். அவள் நிறைய மனோசக்தி உடையவள். ஆணைவிட எதையும் முன்கூட்டியே அறியும் திறன் உடையவள். கருணைக்கு மட்டுமே ஒரு கோயில் உள்ளதென்றால் அது பெண்ணின் இதயம்தான். மன்னிக்கும் இதயம் உண்டென்றால் அது தாயின் இதயம்தான். உலகில் உள்ள உயிரினங்களிலேயே பெண்ணினம்தான் அதிகம் சோதிக்கப்படுகிறது. நடப்பன, பறப்பன, ஊர்வன என்பதிலிருந்து

[க]வலை

திருமதி.S.D.சாந்தா சிவம் ஒரு காரியம் நம் எதிர்பார்ப்பிற்குத் தகுந்த மாதிரி நடக்காத போதும், நாம் விரும்பியது நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்காத போதும், திடீர் விபத்துகள் போல எதிர்பாராத அதிர்ச்சியான ஒரு சம்பவம் நடந்து விட்டால் என்ன ஆகும்? நாம் என்ன ஆவோம்? என்பது வரை நம் குடும்ப உறுப்பினர்களை விடவும் பாசமாக நம்மில் பலரையும் மோசமாக வலை விரித்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது கவலை என்ற வலைதான். இன்னும் சொல்லப் போனால் இந்த வலையில் நாம் விழுகிறோம்

[வி]வேகம்

திருமதி.S.D.சாந்தா சிவம் நம்முடைய வாழ்க்கையில் சிரிப்பும், அழுகையும் மாறி மாறி வரும் ஒன்று. முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தால் ச்சீ… இந்தப் பழம் புளிக்கும் என்ற உணர்ச்சிகளுக்கு வெகு சீக்கிரமே தள்ளப்படுவோம். கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடும்போது, அடுத்தவரைத் தொட்டதும் பார்வை கிடைக்கும் சந்தோஷம் கொள்கிறோமே… அதைப்போல அழுகைகளோடு பிரச்சனைகளும் கலந்திருந்தால்தான் வாழ்வின் இயல்புகள் புரிபடும். அப்பொழுதுதான் மகிழ்ச்சியை மழுங்கடிக்காமல் முழுமையாக அதன் மகிமையை மதிக்கக் கற்றுக்கொள்வோம். பெரும்பாலும் நாம் வெளி உலகுக்குத் தெரியும் உடலை மட்டுமே அதிகம் கவனிக்கிறோம்.

error: Content is protected !!