
பச்சை வண்ண பொருட்களுடன் மற்ற வீட்டு உபயோகங்களிலும் பச்சை வண்ணமிருக்கும்படி பார்த்துக்கொள்வது அவர்களின் அரோக்கியத்தைப் பாதுகாக்கும். பச்சை நிறம் ஓய்வு நேரத்தை நன்கு செலவழிக்கவும் ஓய்வை நன்கு அனுபவிக்கவும் தூண்டும் உற்சாகமான டானிக்கான நிறம். வீட்டு அலங்கரிப்புகளில் விசாலமான நிறம். இதை அதிகமாக கவனத்துடன் சேர்த்து அலங்கரித்தால் வீடு இண்டீரியர் டெக்கரேஷனில் மிக சோபிக்கும்.

மற்ற நிறங்களைவிட பச்சை நிறங்களுள்ள பயிர்வகைகள், தோட்டவேலை உட்பட பச்சை சம்பந்தமான பின்னணியில் வேலை செய்பவர்கள், வயிற்றுவலி அதன் சம்பந்தமான உபாதைகள் ஆகியவற்றின் தாக்குதலில்லாமல் வேலை செய்வதாக ஆராய்ச்சி நிபுணர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். பச்சை நிறம் வலிகளைக் குறைத்து சௌகரியம் தருகிறது. சுகமான ஒரு அனுபவத்தை உடல் உணர்ந்து, அசௌகரியம் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றுகிறது. அதனால்தான் ஆஸ்பத்திரி, கிளினிக் முதலியவற்றில் பச்சை வண்ணமிருக்கும்படி பல ஸ்கிரீன் வகைகள், ஆபரேஷன் தியேட்டர்களில் இந்த கலர் இருக்கும்படி கவனித்து செயல்படுகிறார்கள். டாக்டர்களும், இந்த வண்ண உடையையே ஆபரேஷன் செய்யும்போது பயன்படுத்துகிறார்கள். பச்சை வண்ண பொருட்களே ஆப்ரேஷன் தியேட்டர்களில் அதிகமிருக்கும்.
பச்சை நிறத்தின் நன்மை-தீமை, அடுத்த மாதம் . . .