இளம்பச்சை நிற உடை அணிந்த பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் மிக இளமையாகத் தெரிவர். அதுவும் சிவந்த நிறமுடைய பெண்களுக்கு மிக எடுப்பாக அவர்களின் வயதைக் குறைத்துக் காட்டும். இந்த வண்ணத்தில் அதிகம் சோபிப்பார்கள். கவர்ச்சியாகத் தெரிவார்கள். இவர்களைப் பார்க்கும் ஆண்கள் அழகில் கிறங்கிப் போவார்கள். பளிச்சென இவர்கள் தெரிவதால் இவர்கள் மேல்தான் அனைவரின் கண்களும் மொய்க்கும்.

விழிப்புணர்வு மிக்கவர்கள். சட்டென்று எதையும் எடுத்தெறிந்தாற்போல் பேசும் தன்மையும் கொண்டவர்கள். சிலர் குத்தலாக – கிண்டலாகப் பேசுவார்கள். வேடிக்கைப் பேச்சு உள்ளவர்களும் உண்டு. சீரியஸான தன் சொந்த விஷயத்தையும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். அதிக சந்தோஷமும், துக்கமும் கொள்ளமாட்டார்கள். எதையும் மிகைப்படுத்தலாக காண்பிக்காத அடக்க குணம் உடையவர்கள்.
புத்திசாலியான இவர்கள் அதிக கற்பனை வளம் மிக்க படிப்பாளிகள். கதை, கவிதை புனைவார்கள். இயல்பான பேச்சால் மற்றவர்களைக் கவரும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் பேசிவிட்டுச் சென்றாலும் பழகிவிட்டுப் பிரிந்தாலும் இவர்களை மற்றவர்கள் லேசில் மறக்க மாட்டார்கள். இவர்களின் பேச்சும், பழகும் விதமும் அத்தனை ரசனையாக இருக்கும்.
மிக புத்திசாதுரியமாகப் பேசி சிரிப்பையும், சந்தோஷத்தையும் உண்டுபண்ணுவார்கள். எதைக் கேட்டாலும் பதில் தந்த வண்ணமே இருப்பார்கள். பலவற்றையும் கேட்டு, படித்து, தெரிந்து வைத்திருப்பார்கள்.
மிக சுறுசுறுப்பாணவர்கள். எதையும் ஈடுபாட்டோடு செய்வார்கள். தங்களைப் பற்றி மற்றவர்கள் கூறுவது நல்ல விஷ்யங்களாக இருக்கவேண்டும், பெருமை பட பேசவேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களின் செயல்பாடுகள் அதைத் தக்கவைத்துக்கொள்ள மிக முயற்சி செய்வதாக இருக்கும். நன்னடத்தை மூலம் நல்ல பெயர் வாங்குவார்கள். ஆனால் இவர்களின் நற்செயல்களைப் பிடிக்காதவர்கள் இவர்களைப் பற்றிப் பொறாமைப் பட்டு இல்லாததைப் பேசி கதை விடுவார்கள்.
எதையும் முயற்சி எடுத்துக் கஷ்டப்பட்டாவது முழுமூச்சுடன் வெற்றியைச் சந்திக்கும் திறனுடையவர்கள். ஆனால் புத்தி வேலை செய்யும் அளவுக்கு உடல் உழைப்பு இவர்களுக்கு இராது. மிகச் சிலர் சோர்ந்துவிடும் தன்மையுடையவர்கள். அடுத்தவர்களிடம் தன் வேலைகளைப் பகிர்ந்துகொள்வர். சோம்பேறித்தனம் உடையவர்கள்.
கடினமான வேலைகளைப் பலரின் உதவி கொண்டுதான் முடிப்பார்கள். மொத்தத்தில் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் பேசும் வெகுளித்தனமானவர்கள். சிலர் இதைத் தவறாகப் புரிந்துகொள்ளவும் கூடும். அடக்கமில்லாத பேச்சு, எடுத்தெறியும் பேச்சு என்றெல்லாம் சொல்வார்கள். புரிந்தவர்கள் இவர்களின் நட்பை மிகவும் விரும்புவார்கள். எத்தனை வருட பிரிவென்றாலும் இவர்களை நினைத்த வண்ணமே இருக்குமாறு மனபாதிப்பை உண்டுபண்ணியிருக்கும் காந்த சக்தி உடையவர்கள்.
வீடுகளில், வியாபாரத் துறையில் பச்சை நிறம் அடுத்த மாதம் . . .