ஆண்கள் விரும்பியோ அதிக எண்ணிக்கையிலோ பச்சை நிற உடைகளை அணிவதில்லை. இதோடு இணைந்த நிறமாக மற்ற நிறம் கூடுதலாகவும் இந்த நிறம் குறைவாகவும் இருக்குமாறு உள்ள உடைகளையே தேர்ந்தெடுக்கும் சுபாவமுள்ளவர்கள் ஆண்கள். ஆண்களின் உடையும் பெரும்பாலும் இப்படியே ஒரு வரையறையில் தயாரிக்கப்படுகிறது.
தாராளமான மனமும், சந்தோஷமான எண்ணங்களும் உடையவர்கள். மற்றவர்களை சார்ந்துள்ளவர்களாகவும் இருப்பார்கள். கலகலவென்று பலபேருடன் பேசுவதை ஒரு கலையாகவே கொண்டிருப்பார்கள். ஆனால் அதிகபட்சமாக பச்சை சட்டையை முழுமையாக, (அதிகபட்சமாக அந்த நிறம் இருக்கும்படியான உடைகள்) அணிந்த ஆண்களைப் பார்க்கமுடியாது. இருந்தாலும், அப்படி அணிபவர்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகக் கண்ணுக்கு தெரிவார்கள். இதை அணிபவர்களும் இதை விரும்புவார்கள். இந்த சட்டைக்காரர் இவரின் ‘ட்ரேட் மார்க்’ இது என்று அடுத்தவர் கூறுவதை மிகவும் விரும்புவார்கள். அதில் தனி சந்தோஷம் – மற்றவர்கள், ஏன் சமுதாயத்திலேயே, வித்தியாசப்பட்டு அந்த கண் நோக்கோடு பார்க்கவேண்டும் என்ற அலாதிப் பிரியர்கள் இவர்கள்.
வீட்டிலிருந்தாலும் சரி, வேறு வேலைகளிலிருந்தாலும் சரி, தனிமையை வெறுப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், தனக்குத் தண்டனையே கிடைத்தமாதிரி தவித்துப் போய்விடுவார்கள். தன்னைச் சுற்றிலும் கலகலப்பும், சம்பாஷணைகளும் வேண்டும் என்ற நோக்கில் பேச்சின் சுவாரஸ்யத்தை மிக அனுபவிப்பவர்கள். நான்கு பேராவது எந்நேரமும் கூட இருக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். பல விஷயங்களும் அறிவாற்றலும் உள்ளவர்களுடன் நீண்ட நேரம் பேசி, விவாதிக்க விரும்பும் அறிவுத்திறன் உடையவர்கள். பெண்களைப் போன்று பேச்சில் நாட்டமுடையவர்கள். அதற்காக அவர்களைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள்.
பச்சை நிறத்தை விரும்பும் பெண்கள் பற்றி அடுத்த மாதம் . . .