இந்த உடையணிந்தால் இருதய, நுரையீரல் சார்ந்த நோய்கள் குணமாகும். தலைவலி சம்பந்தமான கண் உபாதைகள் நீங்கும். கண்களுக்குப் பச்சை வர்ணம் குளிர்ச்சியைத் தந்து பல கண்நோய்களைக் குணப்படுத்தவல்லது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இரத்த அழுத்தக்காரர்கள் இதை உபயோகிப்பது நிறந்தது.

மேலும் உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜி) போன்றவைகளைப் பச்சை நிறம் குறைக்கிறது. உணர்வு சம்பந்தமான வினைகளில், மோனோசோடியம் குளோமேட்டை குறைக்கிறது. யாரெல்லாம் உடலாலும், மனத்தாலும் களைப்படைந்துள்ளனரோ அவர்களுக்கெல்லாம் ஓய்வளிக்கும் மருந்துப் பொருளாக பச்சை நிறம் உள்ளது.
உங்கள் உடல் பிரயாணக் களைப்போ அல்லது வேலைக் களைப்போ இதில் எந்த பாதிப்பு அடைந்திருந்தாலும், நீங்கள் குளித்த பிறகு பச்சை வண்ண உடையணிந்தீர்களானால் உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். மனச்சோர்வாய் இருக்கிறது என்றால், வீட்டில் அன்று சுறுசுறுப்பாய் உற்சாகத்தோடு உங்கள் வேலைகளில் ஈடுபடலாம். முகம் புத்துணர்வுடன், களையாக தன்னம்பிக்கையுடன் ஒளிரும். தேஜஸ் தரும். தனி கவர்ச்சி கொடுக்கும்.
பல் முளைக்கும் பருவ வயதுள்ள குழந்தைகளுக்கு அமைதியைத் தருவதற்குப் பச்சை நிறம் பயன்படுகிறது. பொதுவாக பச்சை நிறமணிந்த நர்ஸ் – டாக்டர்களைப் பார்த்தாலே உடல் சமாதானமாகி மனம் சாந்தப்படும்.
மஞ்சள் கலந்த பச்சை நிறம் மனரீதியாக இரக்க சுபாவத்தையும், உடல்ரீதியாக கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.
மேலும் ஆபரேஷன் தியேட்டர்களில் உடலை அறுத்து செய்யும் ஆபரேஷன், பின் தையலிடுவது போன்ற வேலைகளின் போதும், இரத்தம் கொட்டும் போதும் ஏற்படும் வலிகளின் உணர்ச்சிகளை குறைத்து இயல்பாக இயற்கையாக தணிக்கும் திறனை பச்சை நிறம் ஏற்படுத்துகிறது.
பச்சை நிறம் நீண்ட நேரம் பணிபுரியும்படி நம்முடைய செயல்திறனை அதிகரிக்கும். நாம் அதிக நேரம் வேலை செய்யும் ஆஃபீஸ் அல்லது அந்த அறையை பச்சை நிற சுவராக இருந்தால் நலம் அதிகம். நர்சுகள் இந்த உடையணிவதால் அவர்கள் நோயாளிகளிடம் கோப உணர்ச்சிகளையோ, பொறுமையில்லாத் தன்மையோ ஏற்படுத்தாமல் சகிப்புத்தன்மையை வளர்க்கும்.
பச்சை நிற விரும்பிகளுக்கு ஆஸ்துமா, மனக்களைப்பு, மூல வியாதி, உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற வியாதிகள் வரலாம். நரம்பு சம்பந்தமான நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆன்மீகத்தில் பச்சை நிறம், அடுத்தமாதம் . . .