இது நெருப்பின் முதன்மை நிறம். இது தனிமனிதனுடைய ஆபத்துகளின் செயல்பாட்டைக் குறிக்கிறது. ஒரு வித பய உணர்வையும், கோப உணர்ச்சியையும் தூண்டுவதில் முதன்மை பெற்றது.

மற்ற வண்ணங்களைவிட மிக வேகமாகக் கடுங்கோபம், ஆர்வம், வெறி, காமம், காதல், துயரம், குழப்பம், கூச்சல், பயம், இரத்தக்கொதிப்பு, பசி முதலிய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. சிவப்பை விரும்பி உடுத்தும் குணாதிசயம் உடையவர்கள் பதற்றமும், அவசர குணமும் உடையவர்கள். மேலும், பயத்தோடுகூடிய, பக்தியை உண்டாக்கும். ஒருவருடைய கண்களின் சிவப்புத் தன்மை நம்மை பயப்பட்டு ஒதுங்க வைக்கிறது. கோபமாயிருக்கும்போதும், தூக்கம் கெட்டு கண்கள் சிவப்படைந்திருக்கும்போதும், குடிகாரன் கண்கள் சிவந்து இரத்தக் கனலாகத் தெரியும்போதும் நமக்கு ஒருவித வயிற்றைக் கலக்கிய மாதிரியான, நரம்மைப் பாதித்து இரத்த ஓட்டங்களை அதிகரிக்கச் செய்யும்படியான பய உணர்வைத் தூண்டும் சக்தி படைத்தது.
சிவப்பு நிறம் மேலும் சிலவற்றோடு இணைந்தும் இருக்கிறது. ஆற்றல், வல்லமை, பலம், செல்வாக்கு, அதிகாரம், சக்தி, ஊக்கம், செயல்படுத்துதல், செயலாற்றுதல், உயிர்ப்பு, உற்சாகம், சகிப்புத்தன்மை, கிளர்ச்சிகள், வலிமை, சந்தோஷம், இன்பம், அன்பு போன்றவற்றை அதிகரிப்பதும், சாதகமாக இருப்பதும் சிவப்பின் நிலையான தோற்றமாகும்.
கருமை கலந்த சிவப்பு நிறம், விலங்குகளைக் கிளர்ச்சியூட்டி சண்டையிடத் தயாராகும் உணர்வைத் தூண்டும். இந்த உடையணிந்தவரைப் பார்த்தால், விலங்குகள், மிரண்டு போரிட, எதிர்க்கத் தயாராகும். அதாவது எதிரியான ஒரு விலங்கினம் என்ற தாக்கத்தின் பாதிப்புதான் இந்தச் செயல். இந்த நிற உடையோடு நாம் விலங்கினத்தின் எதிரில், அருகில் இருந்தால் நிறைய ஜாக்கிரதை உணர்வு தேவை.
சிவப்புக் வண்ணத்தை உபயோகித்தால், உணர்ச்சி நரம்புகளைத் தூண்டுகிறது. ஐம்புலன்களும் தூண்டப்பெறுகிறது. வாசனை அறிதல், பார்க்கும் பார்வையில் ஒரு விழிப்புணர்வு, நுட்பமாகக் கேட்டறிவது, நாக்கின் சுவை அரும்புகள் முதலியவை தூண்டப்படுகிறது. தொடும் உணர்வை மிக நுண்ணுணர்வாக வெகு சீக்கிரம் அறிய முடிகிற சக்தி ஏற்படும். எதையும் ஆழமாக அறிய முடிகிற தன்மை சிவப்பின் சிறப்பு என்றே கூறலாம்.
மனிதனால் உணரப்பட்ட இரண்டாவது நிறம் என்பது ஆய்வின் உண்மை. இரத்தம் சிவப்பு நிறம். சிவப்பை வாழ்க்கை என்றான் மனிதன், பின் சிவந்த நெருப்பைக் கண்ட மனிதன் அது அபாயம் என்ற உன்மையையும் கண்டறிந்து பயந்தான். பின் காலத்தின் மாறுதலால், அன்பு, ஆற்றல் – செயல்பாட்டின் முழுதிறன், சின்னம், சிவப்பு கருப்புடன் இணைந்த ஒளிபெற்ற பிரகாசமான உடை என்பதையும் கண்டான். அலங்காரப் பொருட்கள், உடைகள், தினமும் தேவைப்படும் பல உற்சாகப் பொருட்களின் நிறம், குடிக்கும் மதுவகை, இன்னும் சிலவகை பானங்களை சிவப்புடன் கூடிய அதைச் சார்ந்த கருஞ்சிவப்பு, ப்ரவுன் நிறத்துடன் கலந்த சிவப்பு என வகைப்படுத்தி நல்ல தேர்ந்தெடுத்தலை அறிந்தான்.
5000 வருடங்களுக்கு முந்தைய, சிவப்பு நிறமுடைய மூலிகைகள், அதனால் செய்யப்பட்ட மருந்துகள், உடலுக்கு உஷ்ணத்தைத் தரும் என்பதைக் கண்டறிந்தார்கள். பல ஆங்கில மருந்து, மாத்திரை, சிரப், சொட்டு மருந்துகள் எல்லாம் சிவப்பு வண்ணமே அதிகமுடையது.
எளிதில் அடையாளம் காணவும், நம் உடலில் இரத்தப் பற்றாக்குறை அதனால் நோய் அதிக்கரித்து, உடல் நிலை மோசமாகிவிட்டது, நமக்கு இரத்தம் தேவைப்படுகிறது என தன் உடல் நலமுடைய மனரீதியாக உணர்ந்து மாத்திரை மற்றும் பல மருந்து வடிவில் ஆங்கில மருந்தாக கிடைக்கக் கண்டறிந்திருக்கிறார்கள்.
சிவப்பு உபயோகிப்பவர்களின் பொதுவான குணங்கள் அடுத்தமாதம்…