சாஸ்திரிய இசையில் உயர்வான காதலையும், வெள்ளை ரோஜா அப்பாவித்தனத்தையும் குறிக்கும். உங்களுக்கு சிவப்பு வண்ணம் பிடித்திருந்தால் நீங்கள் மேம்பட்டவர்களாக இருப்பீர்கள். காதலில் ஒரு வெற்றி கண்டே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடையவர்கள். வாழ்வோ, சாவோ எதுவாகிலும் சரி ஒரு கை பார்த்து போராடி தன் காதலை வலியுறுத்துபவர்களாக இருப்பார்கள். காதலர்கள் இருவருமே சிவப்பு வண்ணம் விரும்பிகள் என்றால் அந்தக் காதல் நீண்ட கால காதல் (அ) வெற்றிதரும் காதலாக அமையும். ஒரு மேம்பட்ட உயர்வான குறிக்கோளுடன், காதலின் அர்த்தம், தாத்பரியம் புரிந்து சாதனை படைத்தே தீரவேண்டும் என்ற வெறித்தனமான கொள்கையுடையவர்கள். உறுதியுடன் செயலாற்றும் தன்மையும் ஆற்றலும் மிகுந்தவர்கள்.

சிலர் வெகு அரிதாக இதற்கு முற்றிலும் மாறுபட்ட குணம் உடையவர்கள். அதாவது சிவப்பு வண்ணமே அவர்களுக்குப் பிடிக்காது. அந்த வண்ணத்தை விரும்பாமல் நம்மிடம் இந்த நிறம் இல்லையே என ஒரு மாறுதலுக்காகவோ இல்லை போரடிக்காமல் இருப்பதற்காகவோ ஒருவர் தேர்ந்தெடுத்தால் அவர்கள் அவசரமான செயலை புரிந்து பின்னர் வருத்தப்படும் குணாதிசயம் உடையவர்களாக இருப்பார்கள். உடுத்திக்கொண்டபின் அல்லது வாங்கிவிட்டபின் பொருளை (சிவப்பு நிறத்தில்) மாற்றிவிடலாமா? என்றும் நன்றாக இல்லையே என்ற அவ நம்பிக்கையும் கொண்டு தன்னம்பிக்கையில்லாமல் வருத்தப்படுவார்கள்.
இப்படி விரும்பாமல் சிவப்பை உபயோகித்தால், மற்றவர்களிடம் இயல்பாக இல்லாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் ‘தன் ஆற்றல்’ இல்லாமல் பேசுவார்கள். இந்த குணம் உடையவர்கள் கல்யாணம் செய்திருந்தாலும், ‘மனைவி சரியில்லை’ என்ற எல்லைவரை போய் இன்னொரு திருமணம் செய்யவும் முற்படுவார்கள். எதை மாற்றலாம் எதை மாற்றக்கூடாது என்றெல்லாம் நினைக்காத – நிலையில்லாத – விபரம் புரியாத அவசரபுத்தி உடையவர்கள். தீர்மானிக்க முடியாத அதிருப்தியாளர்கள். இதிலிருந்து மீளவே முடியாத ஒரு குழப்பவாதிகள். அவர்களே தன்புத்தியறிந்து யோசித்து திருந்தினால்தான் உண்டு. யாராவது ஆலோசனை கூறினால் மேலும் குழப்பமடைபவர்கள் இவர்களாகத்தானிருக்கும். கடைசியில் குழம்பி குழம்பி எல்லாம் நன்மைக்கே என்று சோர்ந்துபோய் சும்மாயிருந்து விடுபவர்களும் இவர்கள்தாம். சிவப்பைப் பிடிக்காமல் ஒரு மாற்றத்திற்கு உடுத்தி பிரச்சினைக்குள்ளாவதைவிட, பிடிக்கவில்லையென்றால் தீர யோசித்து அதை ஒதுக்கிவிடுவதுதான் நல்லது. சிவப்பைப் பிடிக்காதவர்களுக்கு அது பல அபாயங்களை வாழ்க்கையில் தரவல்லது. மனரீதியாக பாதித்து வீண் விபரீதங்களை, பல செயல் தடைகளை உண்டாக்கும்.
இளஞ்சிவப்பான – சிவப்பான – ஒரு பட்டுப்போன்ற (ரோஸ்) பட்டு ரோஸ் நிறத்தை விரும்புபவர்கள், எதிலும் தான்தான் முதலில், எனக்குதான் முதலில், நான் மட்டுமே என்பது மாதிரியான ஒரு குணம் உள்ளவர்கள். அவர்களுடனேயே உள்ள பிறவிக்குணம் இது. பல பேர்களிடம் மிக நல்ல பழக்க வழக்கங்களுடனே பழகினாலும் இந்தக் குணம் மட்டும் அவர்களையும் மீறி எட்டிப் பார்க்கும். இந்தக் குணம் மட்டும் அவர்களை அண்டவிடாமல் பார்த்துக்கொண்டார்களானால் இவர்களைவிட நல்லவர்கள் யாருமே இல்லை எனலாம்.
சிவப்பு விரும்பிகள் பொருள் சேர்ப்பதில் கவனமானவர்கள். சிவப்பு ஓர் அதிர்ஷ்டமான நிறம் என்பது ஒருபுறமிருக்க இவர்கள் சரியான உழைப்பாளிகள். பொருளாதார நெருக்கடி இவர்களுக்கு ஏற்படாது ஏனென்றால் சம்பாதித்ததை மிகுந்த கவனமுடன் சீட்டு, சேமிப்பு என பத்திரமாக சேமித்து வைப்பார்கள்.
சிவப்பு விரும்பிகள் ஆன்மீகவாதிகளாகவும் இருப்பார்கள். பலர், ‘கடவுள் நானே’, சக்தி நான்தான்’, ‘என்னிடம் சக்தி பேசினாள்’ என்றெல்லாம் கூறும் சந்தர்ப்பவாதிகள். கடவுள், நம்பிக்கையும், கற்பனா சக்தியும் அதிகம் உள்ளவர்கள். உணவு விஷயத்தில் பலவற்றையும் தள்ளிவைப்பார்கள். பெரும்பாலும் அரோக்கியமாக இருப்பது போல இருந்தாலும், அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி, டென்ஷனால் தொந்திரவு ஏற்படும்.
உறவினர்களுடன் பாசமும் நேசமும் கொண்டு பழகினாலும் சண்டை சச்சரவு கோபதாபங்களும் அதிகம் கொள்ளும் பேர்வழிகள். வேலைக்காரர்களுடனும், சக ஊழியர்களுடனும் சண்டைபோடும் குணமுடையவர்கள். வேலையாட்களைச் சண்டைபோட்டு துரத்தி மீண்டும் மீண்டும் சலிக்காமல் வேலையாள் தேடுவார்கள். சில சமயம் அதே வேலையாட்களை வலியச்சென்று கெஞ்சி உதவிக்கு அழைப்பார்கள்.
இவர்கள், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல சமயங்களில் மனம் பாதிப்படைந்தவர்கள்போல் மற்றவர்கள் கண்களுக்குத் தெரிவார்கள். முன்கோபிகள். அதனால் பல நல்லவர்களையும், பல நல்ல சந்தர்ப்பங்களையும் இழக்க நேரிடும். பெரும்பாலும் சிவப்பு விரும்பிகள் வறுமையில்தான் இருப்பார்கள்.
சிவப்பு விரும்பிகள் சுத்தத்தை மிகவும் விரும்புவார்கள். மனம் ஒத்துப் போகாமலே மேலும் மேலும் சுத்தம் தேடும் ஒருவித மனபாதிப்பு உள்ளவர்கள். தன் வேலைகளைத் தானே செய்யப் பிரியப்படுவார்கள். (இது மிகக்குறைவானவர்களுக்குப் பொருந்தும்) இவர்களைப் புரிந்து கொள்வது சிரமம். பார்க்க முரட்டுத்தனமாகத் தெரிவார்கள். ஆனால் சிவப்பு விரும்பிகள் மிக இளகிய மனம் படைத்தவர்கள்.
சில சிவப்பு நிற விரும்பிகள், காதலிக்கும்போது புதுமைத்தனமான – புரட்சித்தனமான காதல் செய்வார்கள். வெகு சிலருக்கே காதலில் தோல்வி கிட்டும், அதையும் பெரிதாக எண்ணமாட்டார்கள்.
அரசு உத்தியோகம், ஆன்மீகம் போன்ற துறைகளில் பெரிதும் காணப்படுவார்கள். நேர்மை, கண்டிப்பு போன்ற குணம் உடையவர்களாதனால் வெகு சீக்கிரம் புகழ் கிடைத்துவிடும். சிவப்பு நிற விரும்பிகளுக்கு செவ்வாய் கிரகத்தின் அமைப்பு வலுவாக இருக்கும். செல்வாக்கும் செழிப்புமாக இருக்கக்கூடிய ஓர் அதிர்ஷ்ட நிறம் என்று கூடச் சொல்லலாம்.
திருநங்கைகள் சிவப்பை விரும்பி உடுத்துவார்கள். வடநாட்டில் வசதி படைத்தோரிடம் இவர்களுக்கு செல்வாக்கு அதிகம். வளமோடு, மரியாதையாக, நடத்தப்படுவார்கள். பல முக்கிய விழாக்கள் இவர்கள் இல்லாமல் இல்லை. இதை அங்குள்ளோர் சாஸ்திர சம்பிரதாயமாகக் கொண்டுள்ளார்கள். பெரும்பாலும் ஜரிகை வேலைப்பாடு செய்த சிவப்பு வண்ண உடைகளையே விரும்பி உடுத்தும் வடநாட்டு திருநங்கைகள் தங்களுக்கு மிக பொருத்தமான தெய்வம் தந்த் ஆடை இது என்று மனரீதியாக உணர்ந்து அணிந்து வருகிறார்கள்.
சிவப்பு நிறம் விரும்பும் ஆண்கள் பற்றி அடுத்த மாதம்…