ஊதா நிற உடையணிந்து கொண்டால் ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், சமஸ்கிருதம் போன்ற இலகுவாக நாவில் உச்சரிக்க முடியாத உச்சாடனங்கள் மிகச் சரளமாக உச்சரிக்கக்கூடிய சக்தி வாய்க்கும். என புராணங்களில், சரித்திர புருஷர்கள் நம்பினார்கள்.

அதேபோல் அரசர்களிலிருந்து, சங்க காலத்திலிருந்து, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஊதா நிறப் பூக்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்தது, மனதைக் கடவுளின் வசம் அழைத்துச் செல்லும் சக்தி படைத்தது என நம்பி இன்றுவரை கடைப்ப்பிடித்தும் வருகிறார்கள்.
ஊதா வண்ண மலர்கள் நம் தமிழகத்தில் தெய்வங்களுக்கு என ஒதுக்கப்பட்ட புரட்டாசி, மார்கழி மாதங்களில் அதிகம் பூக்கிறது. ஆனால் நாளடைவில் இந்தப் பூவை கடவளுக்கு உபயோகிக்கலாமா என கால மாறுதல்களிலும், அவநம்பிக்கைகளிலும் மாறுபட்ட எண்ணங்களை ஏற்படுத்தி இந்தப் பூக்களை ஒதுக்கிவிட்டார்கள். பெரும்பாலும் இந்த நிற மலர்கள் வாசனை இல்லாததும், சிறிது மட்டுமே உள்ள அழகான மலர்கள். மென்மையான மலர்களாக மிகவும் மெல்லிய இதழ்களாகவே இருக்கும் இந்நிற மலர்கள். இதைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கும்போது தாங்கள் உண்மையுள்ளவர்கள் என்றும் நம்பிக்கை அதிகம் வளர்த்து தங்கள் நல்ல குணம் அவர்களுக்கு அதிகம் வரும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தது என நம்பினார்கள். உண்மையும் அதுவே என்று அணித்தரமாகக் கூறலாம். இந்த வண்ணத்திற்கே அப்படி ஒரு சக்தி எந்தச் சூழ்நிலையிலும் பொருந்தும்.
ஊதா நிற உடைகள் . . . அடுத்த மாதம் . . .