இந்த வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட அறையில் இருந்துகொண்டுதான் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்ததாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் இசை மேதை ரிச்சர்ட் வாக்னர் கூறுகிறார்.

ஜீரண உறுப்புகளைத் தூண்டி, ஜீரண சக்தியை ஏற்படுத்துகிறது. வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை முதலியவை இருக்காது. எலும்புகளுக்கு வலுவைத் தருகிறது. முன்கோபத்தைத் தடுக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஊதா வண்ணம் உதவுகிறது. பசியையும் ஒரு கட்டுக்குள் வைக்கிறது. யூகோசைட்டை அமைக்கிறது. பொட்டாசியம், சோடியம் இவற்றின் அளவைக் கட்டுப்படுத்துகிற தன்மை இதற்கு உண்டு.
ஊதா நிறக் கண்ணாடி ஜன்னல் வழியே வரும் ஒளி அதிக சக்தி வாய்ந்தது. தியானம் செய்வோர் ஊதா நிறக் கண்ணாடி பதித்த அறையில் இருந்து செய்தால் தியானத்தின் பலனை முழுமையாக அடையலாம். வீடுகளில் இந்த கண்ணாடி வைத்த ஜன்னல்களிருந்தால் குளிர்ச்சியைத் தரும். அவர்கள் டென்ஷனாகாமல் மனம் தீர்க்கமாக சிந்திக்கும் ஆற்றலுடன் தெளிவாகவும் இருப்பார்கள். இவர்கள் திறந்த புத்தகமாக விளங்குவார்கள். நம்பிக்கைக்குரியவர்கள் இவர்களிடம் எந்தக் காரியத்தையும் ஒப்படைக்கலாம். சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். சமரசம் செய்வதில் இயல்பாக ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள். நகைச்சுவை ததும்பப் பேருவார்கள். இவர்கள் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேற விரும்புவார்கள். வினாடி நேரங்களைக்கூட மதிக்கும் இவர்கள், முயன்றதெல்லாமே வெற்றியடைந்துவிடாது. அதே சமயம் தோல்விகள் இவர்களைச் சாய்த்தும் விடாது. விடாமுயற்சியுடையவர்கள்.
ஆன்மீகத்தில் ஊதா நிறம் . . . அடுத்த மாதம் . . .