இந்த நிறத்தை விரும்புபவர்கள் நல்ல நடத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும், இனிமை கலந்த பாசத்துடனும், அதே சமயம் கௌரவமான உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாகவும் இருப்பார்கள். நல்லவர்களை வெகு சீக்கிரம் அடையாளம் காணும் அறிவாளிகள். இவர்களுடன் மற்றவர்கள் பழக ஆர்வமும் ஆவலும் கொள்வார்கள். இந்த நிறத்தையே . . . பெரும்பாலும் பல சமயங்களில் வாழ்க்கையின் அத்தியாவசியங்களிலும் உபயோகிப்பவர்கள், இன்னும் பல சிறப்பம்சம் பொருந்தியவர்கள். பலர் சிறப்புற வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக உலகத்தார் கண்களுக்குத் தெரிவார்கள்.

இந்த நிற விரும்பிகள், வார்த்தை ஜாலம் மிக்கவர்கள். பேச்சுத்திறனும் அருமையாக மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் குரல் வளமையும் பெற்றவர்கள். இவர்களின் குரலுக்கு பல்லாயிரம் பேர் மயங்கிக் கிடப்பார்கள். பிரபலமான பேச்சாளர்களாகவும், புத்தக ஆசிரியர்களாகவும் திகழ்வார்கள். இலக்கிய விரும்பிகள், பேச்சில் காந்த சக்தி படைத்தவர்கள் வசியம் வைத்ததுபோல் மற்றவர்களை மயங்கச் செய்வதில் இயற்கையிலேயே அமையப் பெற்ற சாதுர்யம் படைத்தவர்கள். கெட்டவர்களை சீக்கிரம் அடையாளம் காணும், ஞானம் சுய அறிவு பெற்றவர்கள். குற்றவாளிகள் இந்த நிற விரும்பிகளைப் பார்த்தால் பயந்து ஒதுங்கி இவர்களுடன் பழகப் பயப்படுவார்கள் என்பது இந்த நிறத்தின் மகிமை என்றே கூறலாம். சக்தியும் கூட என்று கூறலாம்.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்த உடை அணிந்த அதிகாரிகளுடனோ அல்லது மிகச் சாதாரண நபருடனோ கூட விவாதிக்கவோ, விரோதித்துக்கொள்ளவோ அச்சப்படுவார்கள். மாறாக ஒரு தெய்வீகத் தன்மை கொண்ட ஓர் அதீத சக்தி இவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு அடிபணிந்து போக முற்படுவார்கள். வார்த்தை உச்சரிப்புகளில் மலைத்து ஆளுமைத் திறனில் மயங்கிச் சரணடையும் வாய்ப்பும் அதிகம் பெற்ற திறனுடைய வண்ணம் இந்த ஊதா நிறம்.
இயற்கையான தெய்வீகத்தன்மை தானே வரும் வரப்பிரசாதமாக பெற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள், மக்கள் சக்தி பெற்றவர்கள் இந்த நிற விரும்பிகள்.
உயர்ந்த உன்னத இடத்தில், அந்தஸ்த்தில் இருப்பவர்களைப் பட்டியலிட்டால் பெரும்பாலும் இந்த நிறக் காதலர்களாகத்தான் திகழ்வார்கள். அரச குடும்பத்தில் உள்ளவர்கள் இதைத் தங்களின் சொந்த பாரம்பரிய நிறம் என்றே எண்ணினார்கள். அவர்களுக்குக் கம்பீரமும் ஆளுமைத்திறனும் அதிகரிக்கும்.
ஊதா விரும்பிகள் காதல் உணர்வு மிக்கவர்கள். முதிய வயது ஆனாலும் காதலிப்பார்கள். பெரும்பாலும் இவர்களின் காதல் தோல்வியில்தான் முடியும். எழுத்துத்துறை, ஜோதிடம், சட்ட வல்லுனர்கள், நீதிபதி, பேங்க் போன்ற வேலைகளில் இவர்களைக் காணலாம்.
ஊதா நிறம் விரும்பும் ஆண்கள் . . . அடுத்த மாதம் . . .