நல்ல எண்ணங்கள், தெய்வீக உச்சாடனங்கள் ஆன்மீக விஷயங்கள் போன்றவற்றிற்கு ஊதாவின் பங்கு அதிகமாக உள்ளது.

ஊதா நிறம் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. வளமையுடனும், உடல் வனப்புடனும், தங்களின் நிறங்களுக்கு சோபையை அதிகரிக்கச் செய்யவல்லது என்று நடைமுறையில் உணர்ந்தவர்கள், புரிந்தவர்கள், அரசகுடும்பம் மட்டுமல்லாது, பல உயர்ந்த அந்தஸ்து உடைய ஜமீன் பரம்பரை, பண்ணையினர் கூட இதைப் பின்பற்றச் செய்தார்கள். அவர்களும் இந்த நிறம் உயர்ந்த அந்தஸ்துக்கே சொந்தமான நிறம், சொத்து என்று தங்கள் உடையலங்காரத்தில் அதிகம் இடம் பெறவும் அத்தியாவசிய அலங்கார பொருட்களிலும், பல உயர்ந்த கம்பள விரிப்புகளில், வண்ணப்படங்களில் முக்கிய வண்ணமாக அமையுமாறு பார்த்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டார்கள்.
அரசு அந்தஸ்துடையவர்கள் பலருக்குப் பரிசுப் பொருட்களாக வழங்கும் பொன்னாடைகளில் இந்த மதிக்கத்தகுந்த ஊதா நிறம் இருக்கும்படியும், இந்த நிறம் அரசு சொத்து என மதிப்பிட்டு மற்றவர்களுக்குப் புரிய வைத்திருந்தார்கள். நீலமும், சிவப்பும் கலந்த இந்த ஊதா அரச குடும்பத்தை ஆட்டிப்படைத்து இதனூடே வாழ்வைக் கலந்து தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டார்கள்.
ஊதா வண்ணத்தைப் பிடிக்காதவர்கள் இவ்வண்ணத்தைப் பார்க்கும்போது நல்லவர்கள் போல் நடிக்கவும், பாசாங்கு செய்ய்வும் ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது தன்னம்பிக்கையில்லாமல் தாழ்வு மனப்பன்மை கொண்ட பயந்த சுபாவமுடையவர்கள் இவர்கள். இந்த நிறம் அவர்கள் கண்களில் படும்போது தன் பெருமையைக் கூறி ஒரு போலியான போர்வையைப் போர்த்திக்கொள்ள முற்படுவார்கள். ஒரு விதமான நோயுடையோரை அடையாளம் காட்டும்வண்ணம் இந்நிறம் அபார சக்தி படைத்தது. எந்த நிறமானவர்களாக இருந்தாலும் சிவந்த, வெள்ளை நிறம் உடையவர்களுக்கு மிகச்சிறப்பான எல்லையில்லா, கண்கள் கூசும்படியான அழகைக் கூட்டிக் காண்பிக்கும். மாநிறத்தவர்களுக்கும் அவர்களின் நிறத்தை அதிக சிவப்பாக எடுத்துக் காட்டி அழகை, கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும். கருத்த நிறத்தவர்களுக்கு ஒரு காந்த சக்தியைச் தந்து எந்த நிறத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பாக பட்டுபோல அவர்களைக் காண்பிக்கும் திறன் கொண்டது.
ஊதா வனவில் வண்ணங்களில் விரைவான அதிர்வுகளைக் கொண்டது. மற்ற வண்ணங்களைவிட விரைவாக புத்துணர்ச்சியை இழக்கச்செய்துவிடும் தன்மை கொண்டது.
ஊதா நிறத்தை உபயோகிப்போரின் பொதுவான குணங்கள் . . . அடுத்த மாதம் . . .