சிவப்புநிற விரும்பிகளுக்கு, பண்பும், அமைதியும், நிறைந்த மனைவி கிடைப்பாள். பொதுவாக இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். இவர்களின் உறவில் சண்டை, சச்சரவு என்று ஒன்று இருந்தால் அதற்கு இவர்களே காரணம். சிவப்பை விரும்பும் ஆண்கள், மனைவிக்கு பணிந்து பாசமாக பழகும் பெண்தன்மை உடையவர்கள். பெண்களைப்போல் வீட்டு வேலைகளை விரும்பி மேற்கொள்வார்கள். (ஒரு விதத்தில் இவர்களைக் கணவராக பெற்ற பெண்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளே!)

He man என்று சொல்லுமளவு ஆன்மை நிறைந்தவர்கள். யாருக்கும் எதற்கும் பயப்படாதவர்கள். ஆபத்துகளையும், பிரச்சனைகளையும் புன்னகையோடு ஒரு சவாலாக பிரியமாக ஏற்றுக்கொள்ளும் துணிச்சல்காரர்கள். சம்பிரதாயங்களைப் பார்க்காமல் மிகவும் வித்தியாசமாக மற்றவர்கள் பிரமிக்கும் வகையில் செயல்புரியும் திறமையுள்ளவர்கள். பிரச்சனைகள் மோத வரும்போது, காளையைக் கொம்பால் அடக்கித் தோளில் தூக்கிப் போட்டுக்கொள்ளும் தீரமிக்கவர்கள். அதையும் கூட மிக உற்சாகமான மனநிலையில் சந்தோஷமாகச் செய்யும் பேர்வழிகள். இவர்களிடம் ஒரு குணம் நீண்ட நாட்கள் பொறுமையோடு இருந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்றால் இவர்களால் முடியாது.
வேகமாக முடிக்க வேண்டிய காரியங்களை அதை முடிக்கும் திறமையுள்ளவர்களைத் தேடி அவர்களிடம் தள்ளிவிடுவார்கள். இளமைக்காலங்களில் சாதுரியம் உள்ள இளைஞன் என்ற பெயர் பெற்று, வாழ்க்கை முழுவதுமே அது மிளிர வாழ்வார்கள்.
இளஞ்சிவப்பு நிறத்தை விரும்பும் ஆண்கள் உடல்பலத்தைவிட மனோபலத்தை உடையவர்கள். தைரியத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் பின்னடைவு உள்ளவர்கள். பேச்சிலும், தடுமாறும் தோற்றத்தாலும், நரம்புத்தளர்வு உள்ளவர்கள் போலக் காணப்படுவர். கலவரப்பட்டவர்கள் போலவும் குழப்பமடைந்தவர்கள் போலவும் சிலர் காணப்படுவர். மற்றவர்களைச் சந்தோஷபடுத்தவே ஆவல் உள்ளவர்கள். இதனால் மற்றவர்களுக்கு முன்பாகப் பணிந்து குழைந்து பழகும் பண்புடையவர்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை ஒரு ‘ஆமாஞ்சாமி டைப் பேர்வழி’ என்பார்கள். பெரும்பாலோர் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வருபவர்கள்.
சிவப்பு நிறம் விரும்பும் பெண்கள் பற்றி அடுத்த மாதம்…