நான் கடவுள் படம் முடிந்த பிறகு மீண்டும் காசி மாநகரக் காட்சிகள் காட்டப்படுகிறது.
கேமிரா காசி நகர் படிக்கட்டுகளில் மேல் நோக்கி நகர்கிறது. அங்கே படிகட்டில் அமர்ந்தபடி இளவயது சாமியார் ஒருவர் அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார்.
ஆசிபெற்ற ஒருவர்: ஸ்வாமி, நீங்க நன்றி சொல்லணுன்னா யாருக்குச் சொல்வீங்க?
சாமியார்: நான் இங்க வந்ததுக்கு என் அப்பனும் நாலு ஜோசியகாரங்களுந்தான் காரணம். அவங்களுக்குதான் மொதல்ல என் நன்றிய சொல்லணும். நான் குடும்பத்துக்கு ஆகமாட்டேன்னு சொன்ன, நாலு ஜோசியக்காரங்க பேச்சை நம்பி, என்னை என் அப்பா இங்க விட்டுட்டுப் போனாரு. அப்ப எனக்கு ஏழு வயசு.
ஆசி பெற்றவர்: உங்க அப்பா திரும்பவும் இங்க வந்து உங்களை ஊருக்கு கூட்டிட்டு போகணுன்னு சொன்னா நீங்க போவீங்களா?
சாமியார் சிரிக்கிறார்.

சாமியார்: நான் போகமாட்டேன். நம்ம எல்லாத்துக்கும் மேல கடவுள்னு ஒருத்தன் இருக்கான். என்னை அவன் போகவிடமாட்டான். எனக்கு பதிலா அவன் போவான்? (கையை மேல் நோக்கி காட்டுகிறார்)
கேமிரா படிகளில் மேல் நோக்கி செல்கிறது. அங்கே தியானத்தில் அமர்ந்தபடி ருத்ரன் (ஆர்யா).
குறிப்பு: படத்தில் இந்த க்ளைமாக்ஸ் இல்லை. படம் பார்த்தபின் எனக்குத்தோன்றியது.