ஊதா வண்ண உடை, நிறம் குறைவானவர்களுக்கு அத்தனை எடுப்பாயிராது என்றாலும், வெள்ளையுடன் கலந்து அணியலாம். பிங்க் நிறத்துடனும், இளமஞ்சளுடனும், இளம் தளிர் பச்சையுடனும் அணியும்போது நீங்கள் எடுப்பாகத் தெரிவீர்கள். ஒரு யூனிஃபார்மாக அணியாமல் மற்ற வண்ணங்களுடன் கலந்து பகல், மாலை, இரவு வேளைகளிலும் அணியலாம். ஜரிகை வைத்த ஊதா, பட்டு மற்ற வண்ண ஜாக்கெட்டுகளுடன். அணியும்போது நல்ல எடுப்பாகத் தனி அழகைத் தரும்.

மாநிறத்தவர்களும் மேலே கூறியவைகளையே பின்பற்றலாம்.
சிவந்த மேனியுடையோர் எந்நேரமும் அணியலாம். முழுவதும் ஒரே கலராக அணிந்தாலும் கான்ராஸ்ட்டாக (நேர் எதிர்) அணிந்தாலும் அழகாகவே தெரிவீர்கள். இரவில் ஜரிகை வேலைப்பாடுடைய பட்டுப்புடவையில் மிக ஜொலிப்பாகவே தெரிவீர்கள். பகலிலும் நன்றாக
இருந்தாலும், இரவுதான் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் இரவு விழாக்களுக்கும் ஐரிகை இல்லாமலும் அணிந்து செல்லலாம்; தவறில்லை.
பட்டுப் புடவையில் பல வண்ண பார்டர் வைத்த ஜரிகைப் புடவை இருக்கிறது. மற்ற வெரைட்டி (பூணம், ஷிபான், பாலியெஸ்டர்) புடவைகளில் சில குறிப்பிட்ட கலர்தான் மேட்சிங் அல்லது நேர் எதிர் கலருக்கு எடுப்பாக இருக்கும். பட்டுப்புடவையில் வரையரை அவ்வளவாக இல்லாமல், இந்த ஊதா வண்ணத்தை ஜரிகை இழையுடன் பல வண்ணங்களிலும் இழைத்து, நெய்து நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அதனால் இது எவருக்கும் சமய சந்தர்ப்பமில்லாமல் எடுப்பாகத் தெரிய நல்ல வாய்ப்பிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சிறப்பான விஷயம் பட்டுப்புடவை ஒரு ராஜ பரம்பரையாக உங்களை எண்ணும்படி ஒரு நல்ல உயர்வான எண்ணத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தவல்லது.
ஒரு காந்தம்போல மற்றவர்களைக் கவரும் தன்மை கொண்டது. அதனால் இந்த நிறம் உங்களை மிகுந்த சிறப்புக்குள்ளாக்கும். பல நல்ல அரிய சிறப்புக்களைப் பெற்றுத்தரும் ஊதா வண்ண உடை எந்த சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது.
வெள்ளை நிறத்தின் தன்மை . . . அடுத்த மாதம் . . .