இது நாகப்பழக் கலர் இதை விரும்பும் பெண்கள் படாடோப விரும்பிகள்.

இந்நிறம் எப்போதும் மேல் நிலை மக்களால் மட்டுமே விரும்பப்படுவதாக உள்ளது. எல்லோரையும்விட உயர்ந்த பிறப்பு என்று காண்பித்துக்கொள்ளக் கூடியவர்கள். பாசம், பணம், சௌகரியம் என்று பிரபுக்கள் போன்ற எண்ணங்களால் நிரப்பப்பட்டவர்கள். இதனால் இவர்கள் சுய சம்பாத்தியத்தில் மிக படாடோபமாக இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை. கணவன் அல்லது தந்தையின் சம்பாத்தியத்தில் இப்படிப்பட்ட பிரபுத்துவ வாழ்க்கையை மேற்கொள்வார்கள். துரதிஷ்ட வசமாக மிகச்சிலரே அவர்களின் இத்தகைய மனப்போக்கில் நினைத்ததை அடைந்து வெற்றி பெறுவர். எவ்வளவு ஏழ்மையாய் இருந்தாலும், கௌரவத்தை விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள். முடிந்த மட்டிலும் சுய கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். வாழ்க்கையின் முக்கிய அம்சமே இதில்தான் அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்கள்.
வியாபாரத்துறையில் ஊதா நிறம் . . . அடுத்த மாதம் . . .