நீல நிற விரும்பிகள் கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் பரிசீலனை செய்பவர்களாகவும் முன்னெச்சரிக்கையுடையவர்களாகவும் இருப்பார்கள். கருத்துக்களை விலாவாரியாகப் பலருடன் விவாதித்துப் பேசும் வல்லவர்கள். முன் ஜாக்கிரதையுடன் எதிலும் வெற்றிகாண்பவர்கள், இவர்கள்தாம்!

பயப்படும் சுபாவம் கொண்டவர்களாகச் சில நீல வண்ணக்காரர்கள் இருப்பார்கள். தலை சொட்டை, வழுக்கை, கண் நோய்கள், வயிற்றுப்போக்குக் கூட ஏற்படும். இன்னும் பலருக்கு தலைவலி, ஒரு பக்க தலைவலி, வாதநோய், தோல் வியாதி, டான்சில் எனப்படும் தொண்டை நோய் கூட ஏற்படும். மனச்சிதைவினால் தூக்கமின்மையால் அவதிப்படுவோரும் பலர் உண்டு.
இவர்கள் முன்னெச்சரிக்கை பேர்வழிகள். தாராள மனப்பான்மையும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்னமும் இயற்கையிலேயே அமைந்துள்ளவர்களாகவும் இருப்பார்கள். முன்கூட்டியே எதையும் திட்டம்போட்டுச் செய்யும் கடமை வீரர்கள். அதனால் இவர்கள் வாழ்க்கையில் நேரத்தைக் கண்ணாக நினைக்கும் கர்ம புருஷர்கள். தோல்வியை அதிகம் சந்திக்கமாட்டார்கள். அப்படியே சந்தித்தாலும், மேலும் உற்சாகத்துடன் இன்னும் பல மடங்கு முயன்று வெற்றிக்கனியைப் பறிப்பவர்களும் இவர்கள்தாம். கவலைகளையோ, சந்தோஷங்களையோ, கோபத்தையோ வெளிக்காட்டமாட்டார்கள். எல்லாச் சூழ்நிலையிலும் அடக்கம், பண்பு, நம்பிக்கையோடிருப்பார்கள். திட நம்பிக்கை கொண்ட தைரியசாலிகள். துணிச்சலைத் துணையாகக் கொண்டவர்கள். ஆனால் மற்றவர்கள் எந்த காரியமோ, எச்செய்தியையோ சொல்லி மிக வற்புறுத்தி வரும்படியோ செய்யும்படியோ கூறினால் பின் வாங்குவார்கள்.
எதிலும் இவர்களாகவே முன்வந்து செய்யும் நல்ல குணம் படைத்தவர்கள். மாறாக மன்றாடிக் கேட்டாலோ அடம்பிடித்தாலோ கேட்கமாட்டார்கள். மற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற இயல்பான குணம், உணர்ச்சிகள் இவர்களுக்கு இருக்கும்போது பிடிவாதத்தால் இவர்களை வெல்லமுடியாது. அதனால் இந்த நீலநிற விரும்பிகளைக் குறிப்பெடுத்து அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் நடந்துகொண்டால் அவர்களின் காரியம் கைகூடும்.
இவர்கள் மிகவும் யோசித்து செயல்படும் சிந்தனைவாதிகள். கற்பனா சக்தி இவர்களின் பிறப்பிலேயே அமைந்தது. உணவு உறக்கம் இல்லாமல் கற்பனையில் எதையும் சிந்தித்துச் செயல்படும் புத்திசாலிகள். மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள், ஆராய்ச்சியாளர்கள் இந்த பட்டியலில் அடங்குவார்கள். தங்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் ஆராய்ந்து செயல்படுத்தி எதையும் சரியாகச் செய்து முடிக்கும் நேர்மையானவர்கள். அதனால் இவர்களின் புகழ் உலகில் பலருக்கும் தெரியும். மக்கள் சக்தி படைத்தவர்கள். உண்மையை அதிகம் பேசுவார்கள். பலரும் ஆச்சரியப்படும்படியான பேச்சாற்றல் திறமை மிக்கவர்கள். அதில் உண்மையும், கண்ணியமும், கடமையும், நேர்மையும், காலத்தின் மதிப்பும் தெரியும். இவரின் பேச்சிற்கு மயங்கிப்போகும் மக்கள், காந்த சக்தியால் கட்டுண்டவர்போலிருப்பார்கள். இந்த நீல நிற விரும்பிகள், மக்களின் நன்மதிப்பை சிறுவயது முதலே அடந்தவராயிருப்பர். எந்தச் சூழ்நிலையிலும் ஒரு கதாநாயகனாகத் திகழ்வார்கள்.
நீல நிறத்தை விரும்பி அணிபவர்கள் அந்த உடையோடு வெளியிலோ வீட்டிலோ இருந்தால் அவர்களின் அழகு பலமடங்கு சோபிக்கும். அவர்களுக்குத் தசைகளில் ஒரு ஜொலிப்பை உண்டாக்கும். தோலின் நிறத்தைக் கவர்ச்சியாகக் காட்டும். இந்நிறம் தசைகள், இரத்த நாளங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.
உஷ்ணத்தைக் குறைத்து அவர்களுக்கு உடல் உள்ளம் அனைத்திலும் இதமான ஒரு குளிர்ச்சியை அனுபவிக்க வைக்கிறது. மேலும் அவர்களுக்கும் எதிரிலிருப்பவர்களுக்கும் எடுத்துக்காட்டி ஒரு காதலை வளர்க்கிறது. இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த இந்த நீலநிறம் பயன்படுகிறது. டென்ஷனாக இருந்தால் நீல நிற ஆடையை உடுத்திக்கொண்டால், அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு நிம்மதியான சூழல் ஏற்படும்.
நீல விரும்பிகளுக்குக் கவர்ச்சியாகத் தோன்றுவதில் விருப்பம் அதிகம். உணவுக்கட்டுப்பாடு மிக்க இவர்கள், உணவு வகைகளுக்கும், ஆடையலங்காரங்களுக்கும் அதிக செலவு செய்வார்கள். தலைவலித் தொந்தரவால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். அதிக சிந்தனைவயப்பட்டவர்கள். சுத்தம் இவர்களின் உயிர். சுற்றுப்புறம் தூய்மையாகவும் அழகாகவும் இருப்பதைப் பெரிதும் விரும்பும் இவர்கள், அதற்குப் பணத்தையும் நேரத்தையும் அதிக செலவு செய்யத் தயங்கமாட்டார்கள்.
நீல நிற விரும்பிகள் துணை ஆடையாக வெண்மையை விரும்புவார்கள். இவர்களது வாழ்க்கை வசதி நிறைந்ததாக இருக்கும். பரம்பரைச் சொத்துடன் ஏராளமான தன் சொந்த சம்பாத்தியத்தையும் சேர்த்து வசதிமிக்க வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்வார்கள். காந்த சக்தி நிறைந்த இந்த நீல நிற விரும்பிகளை மற்றவர்கள் தேடிவந்து விரும்பி நட்பு கொள்வது இவர்களின் சிறப்பம்சம். இவர்கள் அன்புக்கு அடிமையானவர்கள். சில சமயம் ஏமாந்து போய்விடும் வாய்ப்பு அதிகமிருந்தாலும், இவர்களின் அன்பு மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துவதுபோலத் தீவிரமாக அன்பு செலுத்தும் உண்மை அன்பு விரும்பிகள். அவர்களுக்காக எதையும் செய்வார்கள். பொறாமைப்படுபவர்களைப் பொருட்படுத்தாது அன்பு காட்டும் உள்ளமுள்ளவர்கள். பரிசுகள் எதையாவது கொடுத்து திருப்தி கொள்ளும் நேசமுள்ளவர்கள். யார்மீதும் இவர்கள் பொறாமைப்படமாட்டார்கள். மாறாக அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர்களை அவர்களின் குணங்களை செயல்களைப் பாராட்டும் பண்பு படைத்தவர்கள்.
ஒருவரின் தோல்வியை, ஏன் இவர்களுக்கு இப்படி நடந்தது? என ஆராய்ந்து அதைத் தனக்கு உதாரணமாகவும், பாடமாகவும் எடுத்து, தான் வெற்றியடைவது எப்படி? எனக் கற்றுக்கொள்ளும் புத்திசாலிகள். ஒருவரின் துரோகச் செயலால், தான் நல்ல பாடம் கற்றுக்கொண்டாலும், அதைத் தனக்கு ஒரு நல்ல படிப்பினை என ஏற்றுக்கொள்ளும் நல்ல யதார்த்தவாதிகள் நீல விரும்பிகள். ஒவ்வொரு கெட்ட பழக்கவழக்கம் உள்ளவர்களிடமும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் உண்டு என்று கூறும் இவர்கள், அதற்குச் சொல்லும் காரணம் எது என்று (நாம் தூர இருந்தோ, அருகிலிருந்தோ) பார்க்கும்போது, அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து கற்றுக்கொண்டு நம்மை நாம் காத்துக்கொள்ளமுடியும் என்று ஆச்சரியப்படும்படி கூறுவார்கள். ஆகா! என்ன சிந்தனை இவருக்கு என நாம் வியக்கும்படி நடந்துகொள்வார்கள்.
நீல நிறம் பயன்படுத்தும் ஆண்கள், அடுத்த மாதம் . . .