வெளிர் பச்சை நிறம், நிறம் குறைவான கறுத்த மேனியருக்கு அழகூட்டும். இந்த இளம்பச்சை நிறம் உடுத்தும்போது சிறிய பூக்கள் டிசைன் உள்ள புடவைகளைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். அல்லது ப்ளைன் புடவையில் பார்டருக்கு மட்டும் டிசைன் வேலைபாடு செய்த புடவையணியலாம். சிறிய பூக்கள் டிசைன் உள்ள புடவைக்கு ப்ளைன் ப்ளௌசும், ப்ளைன் புடவைக்கு அல்லது சிறிய பார்டர் உள்ள ப்ளைன் புடவைக்கு பார்டரின் டிசைன் உள்ள ப்ளௌசும் அணிவது நல்ல மேட்சிங். பகல், மாலை வேளைகளுக்கு இந்த உடையலங்காரம் ஏற்றது. இரவு நேரத்திற்கு இது பொருந்தாது, தவிர்த்திடுங்கள்.

சிவந்த நிறமுடையோருக்கும், மாநிறத்தவருக்கும் கரும்பச்சை, வெளிர்பச்சை, பாசிப்பச்சை என எந்த நிறமும் பொருந்தும். மாநிறத்தவர் கிளிப்பச்சை நிறத்தை தவிர்த்திடுங்கள். அத்துடன் வெளிராக உள்ள நிறமும் இவர்களுக்குப் பொருந்தாது. மற்ற பச்சை வண்ணங்கள் எல்லாம் பொருந்தும். பச்சை நிறம் மாநிறத்தவருக்கும், சிவந்த மேனியருக்கும் பகலில், மாலை வேளையில் நன்கு சோபிக்கும். இரவு நேரமானால் ஜரிகை வேலைப்பாடமைந்த பட்டுப்புடவையாயிருந்தால் எந்த பச்சையும் எடுபடும்.
இளவயது பெண்களென்றால் ஜரிகை நிறைந்த சுடிதாரை (குட்டை கை வைத்தது) அணிந்தால் கவர்ச்சியாகத் தெரிவார்கள். இளம்பெண்கள் சிறிய ஜரிகை பார்டர் (இரண்டு இஞ்ச்) உள்ள ப்ளைன் புடவைக்கு, சிறிய பூக்கள் உள்ள டிசைனோ அல்லது கை-பார்டருக்கு மட்டும் டிசைன் உள்ள ப்ளௌசோ அணிந்தால் அழகுக்கு அழகூட்டுபவையாக இருக்கும்.
பகல் நேரத்திற்கு மேலே சொன்ன சிறிய ஜரிகை டிசைன் புடவைகள் பொருந்தும். மஞ்சள் கலந்த பச்சை வண்ணமும், மாநிறத்தவர்க்கும், சிவந்த மேனியருக்கும் நல்ல பொருத்தமான வண்ண உடையாகத் திகழும். இந்த வண்ணம் பகல் நேரத்தில் மிகச் சிறப்பாக அழகூட்டும் வண்ணம் என்று கூறலாம்.
நீல நிறத்தின் தன்மை, அடுத்த மாதம் . . .