வண்ணங்களும் எண்ணங்களும் #49 • திருமதி.S.D.சாந்தா சிவம் • ஊதா வண்ண உடை, நிறம் குறைவானவர்களுக்கு அத்தனை எடுப்பாயிராது என்றாலும், வெள்ளையுடன் கலந்து அணியலாம். பிங்க் நிறத்துடனும், இளமஞ்சளுடனும், இளம் தளிர் பச்சையுடனும் அணியும்போது நீங்கள் எடுப்பாகத் தெரிவீர்கள். ஒரு யூனிஃபார்மாக அணியாமல் மற்ற வண்ணங்களுடன் கலந்து பகல், மாலை, இரவு வேளைகளிலும் அணியலாம். ஜரிகை வைத்த ஊதா, பட்டு மற்ற வண்ண ஜாக்கெட்டுகளுடன். அணியும்போது நல்ல எடுப்பாகத் தனி அழகைத் தரும். மாநிறத்தவர்களும் மேலே கூறியவைகளையே
வண்ணங்களும் எண்ணங்களும் #48 • திருமதி.S.D.சாந்தா சிவம் • ஊதா நிற உடையணிந்து கொண்டால் ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், சமஸ்கிருதம் போன்ற இலகுவாக நாவில் உச்சரிக்க முடியாத உச்சாடனங்கள் மிகச் சரளமாக உச்சரிக்கக்கூடிய சக்தி வாய்க்கும். என புராணங்களில், சரித்திர புருஷர்கள் நம்பினார்கள். அதேபோல் அரசர்களிலிருந்து, சங்க காலத்திலிருந்து, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஊதா நிறப் பூக்கள் தெய்வீகத்தன்மை வாய்ந்தது, மனதைக் கடவுளின் வசம் அழைத்துச் செல்லும் சக்தி படைத்தது என நம்பி இன்றுவரை கடைப்ப்பிடித்தும் வருகிறார்கள். ஊதா
வண்ணங்களும் எண்ணங்களும் #47 • திருமதி.S.D.சாந்தா சிவம் • இந்த வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட அறையில் இருந்துகொண்டுதான் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்ததாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் இசை மேதை ரிச்சர்ட் வாக்னர் கூறுகிறார். ஜீரண உறுப்புகளைத் தூண்டி, ஜீரண சக்தியை ஏற்படுத்துகிறது. வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை முதலியவை இருக்காது. எலும்புகளுக்கு வலுவைத் தருகிறது. முன்கோபத்தைத் தடுக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஊதா வண்ணம் உதவுகிறது. பசியையும் ஒரு கட்டுக்குள் வைக்கிறது. யூகோசைட்டை அமைக்கிறது. பொட்டாசியம், சோடியம் இவற்றின்
வண்ணங்களும் எண்ணங்களும் #46 • திருமதி.S.D.சாந்தா சிவம் • உற்பத்தி திறன் அதிகரிக்க மில் ரகங்களில், பல தொழிற்சாலைகளில், வியாபார ஸ்தாபனங்களில், சேல்ஸ் கேர்ள்களுக்கும் இந்த ஊதா வண்ணத்தைத் தொழில் நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள். பல நைலான் நூலிழைகளிலான பூச்சாடிகளின் பூக்களுக்கு இந்த வண்ணம் அதிக அழகை எடுத்துக் காண்பிக்கிறது. உயர்ந்த அந்தஸ்துக்கே காலம் காலமாக சொந்தமான ஊதா, பரவலாக மக்களிடையே புழங்கவில்லை என்பதும் உண்மை. ஊதா நிறத்தின் நன்மை . . . அடுத்த மாதம் .
வண்ணங்களும் எண்ணங்களும் #45 • திருமதி.S.D.சாந்தா சிவம் • இது நாகப்பழக் கலர் இதை விரும்பும் பெண்கள் படாடோப விரும்பிகள். இந்நிறம் எப்போதும் மேல் நிலை மக்களால் மட்டுமே விரும்பப்படுவதாக உள்ளது. எல்லோரையும்விட உயர்ந்த பிறப்பு என்று காண்பித்துக்கொள்ளக் கூடியவர்கள். பாசம், பணம், சௌகரியம் என்று பிரபுக்கள் போன்ற எண்ணங்களால் நிரப்பப்பட்டவர்கள். இதனால் இவர்கள் சுய சம்பாத்தியத்தில் மிக படாடோபமாக இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை. கணவன் அல்லது தந்தையின் சம்பாத்தியத்தில் இப்படிப்பட்ட பிரபுத்துவ வாழ்க்கையை மேற்கொள்வார்கள்.