வண்ணங்களும் எண்ணங்களும் #25 திருமதி.S.D.சாந்தா சிவம் இந்த வண்ணம் கறுத்த மேனியருக்காகட்டும், மாநிறத்தவருக்காகட்டும், நல்ல சிவந்த மேனியருக்காகட்டும் அழகைத் தரவல்லது. பகல், இரவு எந்த நேரத்திற்கும் ஏற்ற வண்ணம். கவனத்தில் கொள்ளவேண்டியது: எலுமிச்சை மஞ்சளோ, நல்ல பிரகாசமான மஞ்சளையோ கறுத்த மேனியர் உடுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கறுத்த மேனியருக்கு வெந்தய வண்ணம் எனும், (மஸ்டர்டு) வெளிர் மஞ்சள் பொருத்தமாக இருக்கும், மாம்பழக்கலர், பொன்னிற மஞ்சள் எல்லாம் இவர்களின் கறுத்தமேனிக்கு கவர்ச்சியூட்டி அவர்களை அழகான பெண்களாகக் காட்டும். ஆண்களுக்கும் இந்த
வண்ணங்களும் எண்ணங்களும் #24 திருமதி.S.D.சாந்தா சிவம் பொன்னிற மஞ்சள் – தெய்வீக உணர்வை ஏற்படுத்தவும், வளர்க்கவும், முழுவதுமாக மனதில் நிறைந்து அமைதி, பக்தி, ஞானம் ஏற்படுத்தவல்லது. மேலும், அமைதியுடன் கூடிய ஒரு நல்ல ஓய்வு நேரங்களை சந்தோஷத்தோடு அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தும். ஆழ்ந்த தெய்வீக உணர்வுக்கு பொன்னிற மஞ்சள் உகந்தது. மேலும் புதிய படைப்புக்கள், புது முயற்சிகள், இறக்க சுபாவம், தயாள குணம், தரும காரியங்களை நிறைவேற்றும் மனப்பாங்கை வளர்க்கும் சக்தி படைத்தது. பொன்னிற மஞ்சளின் சின்னம்
வண்ணங்களும் எண்ணங்களும் #23 திருமதி.S.D.சாந்தா சிவம் மஞ்சள் நிறத்தின் நன்மை இது தசைகளின் ஆற்றலைத் தூண்டும் அற்புத சக்தி படைத்தது. உடலின் எந்தப் பகுதியிலாவது மஞ்சள் அதிர்வு தடைப்பட்டால் உடலின் இயக்கம் நிறுத்தப்படும் அல்லது பக்கவாதம்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மஞ்சள் நிறம் சிகப்பு, பச்சை நிறக் கதிர்களின் கலவையாகும். இரத்த நாளங்களின் இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கிறது. ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. பொலிவுடைய ஒரு கவர்ச்சியைத் தரும். இளமஞ்சள் எல்லோருடனும் ஒத்துழைத்து இணக்கமாக வாழத்தூண்டும். திருமணங்களில் தங்க நிறமான
வண்ணங்களும் எண்ணங்களும் #22 திருமதி.S.D.சாந்தா சிவம் புத்தகக் கடைகளில் நம் கண்களை ஓட்டினால் மஞ்சள் நிறத்தோடு கூடிய எந்த நிறமாகட்டும் அந்த அட்டை நம்மைக் கவர்ந்து புத்தகத்தில் லயித்து அதை எடுக்கத் தூண்டும். அந்த புத்தகத்தின் மஞ்சள் நிறம் நம்மை அறியாமலே எடுத்துப் படிக்கத்தூண்டும். அதை வாங்கும்போது மனதைச் சாந்தப்படுத்தி கடைக்காரர்களிடம் நமக்கு ஒரு அமைதியான உறவை வளர்க்கும், ஆர்வமும் துடிப்பும் ஏற்படும். மனதை உற்சாகமாக வைத்து வியாபாரத்தையே வெற்றியாக்கும் திறன் கொண்டது. விற்பவர்கள், வாங்குபவர் இருவருக்குமே
வண்ணங்களும் எண்ணங்களும் #21 திருமதி.S.D.சாந்தா சிவம் சூரிய வெளிச்சம் குறைவான, மங்கலாகத் தெரியும் அறைகளில் அடிக்கப்படும் மஞ்சள் நிறம் வெளிச்சத்தையும், மன சந்தோஷத்தையும் தரும். சமையலறை சுவர்களுக்கு மஞ்சள் நிறம் ஏற்றது. மஞ்சள் நிற கர்ட்டன் தொங்கவிட்டால் சமையலறையில் ஈ, கொசு வருவதைத் தடுக்கலாம். ஆரோக்கியத்தின் சாயலைக் காட்டும், அழகு சமையலறையாக இருக்க இது உதவும். மஞ்சள் வர்ண டப்பா, பாட்டில்களில் சமையலறை மற்ற இதர பொம்மைகள், பைகள், பிளாஸ்டிக் பூக்கள், அறையை அலங்காரப்படுத்தும் பொருட்களாகட்டும், படுக்கை
வண்ணங்களும் எண்ணங்களும் #20 திருமதி.S.D.சாந்தா சிவம் பொன்மஞ்சள் போட்டிருப்பவரைப் பார்த்தால் உங்களுக்கு அவருடன் நட்பு கொள்ளத்தூண்டும். சிவந்த நிறமுடையவர்களுக்கு மிக பாந்தமான பொருத்தமான நிறம். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், கடவுளிடம் ஒரு பயந்த உணர்வைக் கொண்டவர்களும், கடவுளிடம் ஒரு பயந்த உணர்வைக் கொண்டவர்களும், இதை உபயோகிப்பவர்களாக இருப்பார்கள். மேலும் சில பெரிய மனிதர்களிடம் பழகும்போது தன்னம்பிக்கை இல்லாதவராக அவர் நம்மை என்ன நினைப்பாரோ, உதவுவாரோ மாட்டாரோ என்ற அவநம்பிக்கையுடையவர்களின் எண்ண வெளிப்பாடு எலுமிச்சை மஞ்சள். இதை உபயோகிப்பவர்கள்,