விமர்சனம்: எஸ்.எஸ்.ஸ்ரீ குமரகணேஷ் ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்வில் ஒருநாள் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களே கதை. காவல் நிலையம் உட்பட 5+1 (இந்த ஒன்று இலவச இணைப்பு) இடங்களில் ஒருவன் வெடிகுண்டுகளை வைக்கிறான். அதை காவல்துறை அதிகாரிக்கு செல் பேசிமூலம் தெரிவிக்கிறான். குண்டுகள் வெடிக்காமல் இருக்கவேண்டுமானால் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்குமாறு கேட்கிறான். தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டர்களா? அந்த ஒருவனுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன தொடர்பு? அந்த ஒருவன் யார்? என பரபரப்பு குறையாமல் காட்டியிருக்கிறார்கள். கமல்ஹாசன் ஒரு பேட்டியில், முழுப்படம்
எஸ்.எஸ்.குமரகணேஷ் நான் கடவுள் படம் முடிந்த பிறகு மீண்டும் காசி மாநகரக் காட்சிகள் காட்டப்படுகிறது. கேமிரா காசி நகர் படிக்கட்டுகளில் மேல் நோக்கி நகர்கிறது. அங்கே படிகட்டில் அமர்ந்தபடி இளவயது சாமியார் ஒருவர் அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார். ஆசிபெற்ற ஒருவர்: ஸ்வாமி, நீங்க நன்றி சொல்லணுன்னா யாருக்குச் சொல்வீங்க? சாமியார்: நான் இங்க வந்ததுக்கு என் அப்பனும் நாலு ஜோசியகாரங்களுந்தான் காரணம். அவங்களுக்குதான் மொதல்ல என் நன்றிய சொல்லணும். நான் குடும்பத்துக்கு ஆகமாட்டேன்னு சொன்ன, நாலு ஜோசியக்காரங்க