வண்ணங்களும் எண்ணங்களும் #12 திருமதி.S.D.சாந்தா சிவம் பகலிலும் இரவிலும் உடுத்துவதற்கு ஏற்ற வண்ணம் சிவப்பு. கருத்த மேனி உடையவர்களுக்கு அவர்களின் நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டும். நிறம் குறைவானவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறமான (பிங்க்) ரோஸ் ஏற்ற கலர். இந்த நிறமுடையவர்களுக்கு ரோஸ் தனியான ஒரு சோபையைக் கொடுக்கவல்லது. ஒரே நிறத்தில் ப்லௌசும் (ஜாக்கிட்) சேலையும் அணிவது பொருத்தமாக இருக்கும். சுடிதார் அணிபவர்களும் இது பொருந்தி வரும் – (வயதுக்கேற்றபடி) இளவயதுக்காரர்கள் டிசைன் ப்லௌசும் பிளெயின் புடவையும் அல்லது
வண்ணங்களும் எண்ணங்களும் #11 திருமதி.S.D.சாந்தா சிவம் கோயிலில் கடவுளுக்கு அம்மன், பத்ரகாளி, துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு சிவப்பு ஆடை உடுத்தி நமக்கு பயமும், பக்தியும் ஏற்படும் உணர்வை மனரீதியாக புராணங்களிலும், பழங்காலங்களிலும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அம்மன் சம்பந்தப்பட்ட பெண் தெய்வங்களுக்கு வேறு எந்த கலரிலாவது ஆடை அலங்காரங்கள் செய்து இருந்தால் நமக்குக் கடவுளின் மேல் ஒரு பயத்தோடு கூடிய பக்தி ஏற்படாது. சிவப்பு நிறம்தான் நமக்கு அந்த உணர்வை ஏற்படுத்தக்கூடிய முதல் அம்சம். ரூபாய் அகலத்திற்கு ஒருவர்
வண்ணங்களும் எண்ணங்களும் #10 திருமதி.S.D.சாந்தா சிவம் உடல் ரீதியாக, மனநலம் பாதிப்புள்ளானவர்களை அவர்களின் துக்கம், கோபம் போன்ற பல மன பாதிப்புக்களை மேலும் தூண்டிவிடவல்லது சிவப்பு நிறம். இந்நிறம் அவர்களின் நோயை அதிகப்படுத்தி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும். அவர்களிருக்கும் இடத்தில் இந்தக் கலர் உள்ள பொருட்கள், உடை மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட உடைமைகள் போன்றவற்றைத் தவிர்த்தல் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க வழி வகுக்கும். வீட்டிலோ அல்லது மனநல மருத்துவ மனையிலோ இந்த நிறம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவர்களின் மேல்
வண்ணங்களும் எண்ணங்களும் #9 திருமதி.S.D.சாந்தா சிவம் இரத்த ஓட்டத்தில் ஹீமோகுளோபின் குறைந்தவர்கள் சிவப்பு நிறத்தை பல உடைகள், பல பொருட்கள் கன்ணில் படுமாறு உபயோகித்தால்கூட இயற்கையாகவே அவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆச்சரியமான ஓர் ஆய்வு முறை இது, பல ஆய்வாளர்கள் கண்டறிந்து நிரூபித்திருக்கிறார்கள். எச்சரிக்கை உணர்வைத் தூண்டக்கூடிய பாதைகளில், சாலைகளின் ‘சிக்னல்’ சிவப்பு நிறத்தைக் குறிக்கிறது. போலீஸ் துறைகளில் முன்பெல்லாம், சிவப்பு நிறத் தொப்பிகளைப் பயன்படுத்தி மக்களிடம் ஒரு மரியாதை கலந்த எச்சரிக்கையோடு கூடிய பயத்தை
வண்ணங்களும் எண்ணங்களும் #8 திருமதி.S.D.சாந்தா சிவம் இன்று சாதாரண ஹோட்டல்களிலிருந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரையிலும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டுமல்லாது பசியைத் தூண்டிவிடுகிற ரகசியத்தையும் அறிந்து ஹோட்டலுக்குள் நம்மை வரவைக்கிற தந்திரமும் அதுவே. ஊறுகாய், ஜாம், டெமோட்டோ சாஸ், சிக்கன் கறி வகைகள், சூப் வகைகள், கேக் வகைகள், செர்ரி பழங்கள், ஐஸ் க்ரீம்களில் டூட்டி ஃப்ரூட்டி போன்ற பழங்களின் நிறங்களில் சிவப்புத்தன்மை நம்முடைய நரம்புகளைத் தூண்டி பசி உணர்வை ஏற்படுத்துகிறது, பல
வண்ணங்களும் எண்ணங்களும் #7 திருமதி.S.D.சாந்தா சிவம் சிவப்பு நிறத்தை விரும்பும் பெண்கள் தன் ஆட்சிதான் என கணவனை அடக்கி ஆள்பவர்களாக இருப்பார்கள். சில பெண்களுக்குத் திடீர் அதிர்ஷ்டம் வந்து சமூக அந்தஸ்து கிடைக்கும். சீக்கிரமே திருமணம் ஆனாலும், காலம் தாழ்ந்து திருமணம் ஆனாலும் பெரும்பான்மையான பெண்கள் வசதி நிறைந்த ஆஸ்தி உள்ள ஆண்களுக்கு வாழ்க்கைப்படுவார்கள். சிவப்பை விரும்பும் பெண்கள் தங்கள் திருமணத்தின்போது சிவப்பு நிற ஜரிகை வைத்த புடவையைத் திருமண நாளன்று உடுத்தினால் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் கூடிய