2.6.ஆரஞ்சு வண்ண உடைகள்

வண்ணங்களும் எண்ணங்களும் #18 திருமதி.S.D.சாந்தா சிவம் சிறிது வண்ணம் குறைவான கறுத்த மேனியருக்கு இந்த வண்ணம் நல்ல எடுப்பாக இவர்களின் நிறத்தை எடுத்துக்காட்டும் என்பது ஒருபுறமிருக்க, இவர்களுக்கு இந்த நிறம் மிகவும் பிடிக்கும் என்பதுதான் அப்பட்டமான உண்மை. இந்த உண்மையை நியாயப்படுத்த இவர்களும் இந்த உடையை உடுத்த ஒரு யோசனை, பகலில் மட்டுமே இதை உடுத்தலாம். மிகவும் வெளிரான (ப்ரைட்டான) ஆரஞ்சு வண்ண புடவையை உடுத்தாமல் சிறிது மங்கலான ஒளிகுறைவான செம்மண் நிறத்திற்கும் முன்பான ஒரு ஆரஞ்சு

2.5.ஆரஞ்சு நிறம் – வியாபாரத்துறையில், நன்மை, தீமைகள்

வண்ணங்களும் எண்ணங்களும் #17 திருமதி.S.D.சாந்தா சிவம் வியாபாரத்துறையில் ஆரஞ்சு நிறம் ஆரஞ்சு வண்ணத்தை மற்ற வண்ண விரும்பிகள் இது என்ன கலர், என தனித்து நிறுத்தி இதோடு மனம் ஒட்டாமல் ஒருவித அருவருப்புடன் பார்ப்பார்கள். மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஆரஞ்சு நிற ஒளியுள்ள பல்ப் வெளிச்சம் தாவரங்களின் வளர்ச்சியை துரிதமாக வளர்க்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டு காய்கறித் தோட்டங்களில் ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆரஞ்சு வண்ண கூடாரமாக இட்டு ஆரஞ்சு நிற பல்ப் வெளிச்சம் இரவில்

2.4.ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் பெண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #16 திருமதி.S.D.சாந்தா சிவம் இதமான நட்பு கொள்ளும் மென்மை உள்ளம் படைத்தவர்கள். நட்பை எப்போதும் ஒரே சமமாக இருக்கும்படியான நிலையில் பாதுகாக்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள். நண்பர்களிடம் அதிக நெருக்கமும் இல்லாது அவர்களை முழுவதும் துண்டித்துக்கொள்ளவும் செய்யாது நடந்துகொள்ளும் இயல்பினர். சந்தோஷமான விஷயங்களில் நம்பிக்கையோடு முழுவதுமாக அனுபவித்து ரசிக்கும் உணர்ச்சியுடையவர்கள். சிலசமயம் கோபப்பட்டாலும் சடுதியில் மறந்து மன்னிக்கும் குணமுடையவர்கள். மனதில் வைத்து பழிவாங்கும் எண்னமெல்லாம் இல்லாதவர்கள். பழக இனிமை கலந்த நற்குணமுடைய கவர்ச்சி அம்சம் உள்ளவர்கள்.

2.3.ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் ஆண்கள்

வண்ணங்களும் எண்ணங்களும் #15 திருமதி.S.D.சாந்தா சிவம் எல்லா உணர்வுகளையும் சமமாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம். பொறுமை, பாசம், எதிர்கொள்ளல் போன்றவைகளில் சமமாக பாவித்தாலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போவார்களா என்றால் கிடையாது. இவர்களிடம் குழந்தைகள் அலாதிப் பிரியம் வைத்து விளையாடுவார்கள். குழந்தைகளோடு குழந்தைகளாக அவர்களாகவே மாறிவிளையாடுவார்கள். அதனால் குழந்தைகள் இவர்களை விட்டு விலகாமல் ஒட்டிக்கொள்வார்கள். சில விஷயங்களுக்கு அதிக இடம் கொடுக்க ஏதுவாகிவிடும். அடம் பிடிக்கும் பிடிவாத குணத்தில் கொண்டு சென்றுவிடும். இவர்களின் குழந்தைத்தனம். அப்போது விழிப்புணர்வு

error: Content is protected !!