சொந்தம் – சாந்தம்

திருமதி.S.D.சாந்தா சிவம் பள்ளி விடுமுறை என்றோ, இல்லை சும்மா ஒரு சனி, ஞாயிறு வந்து போகலாமென்று வர இருக்கும் சொந்தங்களோ, நண்பர்களோ அவர்களின் வருகையை போன், கடிதம் எந்த ரூபத்தில் தெரிவித்தாலும், “ம்ம் வாங்க வாங்க”, என முகம் மலர உங்கள் வரவேற்பை வீட்டு வாசலைத் திறப்பதற்கு முன் மனதைத் திறந்து வைத்துக் கூறுங்கள். விருந்தாளி என்ற பெயரில் வந்து அது வேண்டும் இது வேண்டும் என பிரச்சனைகளை உண்டாக்குபவர்கள் என்றாலும் இருக்கட்டுமே. பிரச்சனைகளை விட்டு நீங்கள்

கைவசம் – கவசம்

திருமதி.S.D.சாந்தா சிவம் நம் மனம் நம் வசம் இல்லை என்றால் காலப்போக்கில் நம் கைவசம் எதுவுமே இல்லாமல் போய்விடும். பார்ப்பதையெல்லாம் இது தேவையா? இல்லையா? என யோசிக்காமல் வாங்க ஆரம்பித்தோமானால் நம் கைவசம் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து காணாமல் போய்விடும். இரண்டு கால்களுடன் வந்த பணம் போகும்போது பலகால்களுடன் போய்விடும். சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. சம்பாதித்ததைக் காப்பாற்றுவதுதான் பெரிய விஷயம். நிறைய சம்பாதிப்பவர் பணக்காரர் அல்ல. நிறைய சேமிப்பவரே பணக்காரர். நீங்கள் சம்பாதித்ததில் சிக்கனப்படுத்தி

[து]ன்பம்

திருமதி.S.D.சாந்தா சிவம் மொட்டை மாடியிலிருக்கும் வாட்டர் டேங்கில் இரவு குளிர்ந்து போயிருக்கும் தண்ணீர் பகலின் வெப்பத்தில் வெத வெதப்பான நிலைக்கு மாறிவிடும். பருவச் சூழலில் வெப்பமும், குளிர்ச்சியும் மாறிமாறி வருவது இயல்பு என உணர்கிறோம். அது போல், இன்பமும் துன்பமும் கலந்த சுழற்சியான வாழ்க்கைதான் நம் வாழ்வின் அடிப்படை உண்மையும். குளிர்ச்சியின் அருமையை வெயில் உணர்த்துவதைப்போல் வெயிலின் உக்கிரத்தை, குளிர்ச்சியை அனுபவித்து புரிந்துகொள் என்கிறது. ஓர் உண்மையை உணரக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சலில் படுத்திருக்கிறீர்கள் என்று

[அ]வசியம்

திருமதி.S.D.சாந்தா சிவம் ஒருவர் பேசும்போது, எதிரிலிருப்பவருக்கும் வாய்ப்புக் கொடுத்து, அமைதியாக அதே சமயம் விழிப்புணர்வும் கொண்டு சிரித்த முகத்துடன், உதடுகளில் புன்னகை ததும்ப, குரலில் இனிமை கலந்து பேசுவது ஒரு தனிக்கலை. இந்த சுபாவத்தோடு ஒருவர் எங்கு பேசினாலும் அனைவரையும் கவர்ந்து விடுவார். இந்த கவர்ச்சிகரமான செயலால் அருகில் உட்கார்ந்து கேட்பவர்கள் அவர் வசமாகிப் போய்விடுவார்கள். இப்படி அலட்டலில்லாத சுபாவம், முகபாவனைகள், உடல் மொழிகள் எல்லாம் இவரோடு அமர்ந்து கேட்பவரை என்ன காரணம் எனத் தெரியாத அளவுக்கு

error: Content is protected !!