இந்த வண்ண விரும்பிகள் விளையாட்டுகளில் அதிக நாட்டமுள்ளவர்கள். அதிலும் மிக உயர்ந்த விளையாட்டுகளைத்தான் விரும்பி விளையாடுவார்கள். கோல்ஃப், யாட்ச்சிங் எனும் படகு சவாரி, பில்லியார்ட்ஸ், குதிரையேற்றம் போன்ற அரச பாரம்பரியம் கொண்ட விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து விளையாடுவார்கள். நண்பர்களைக் குறைவாகவே வைத்திருப்பர். காரணம், கௌரவம் பார்த்து மிகச்சிலரையே நட்பாகக் கொண்டு பழகுவார்கள். அதிக நண்பர்கள் தொந்தரவு, தன் கௌரவம் பாழாகும் என்ற எண்ணமுடையவர்கள். உடல் பலம் இருந்தாலும் தன்னை வருத்தி வேலை செய்யமாட்டார்கள்.
நிதானத்தையும், கவனத்தையும் அதிகமாகத் தன் காரியங்களில் காட்டுவர். இதை மிகவும் கடை பிடிப்பார்கள். சமயங்களில் விவேகமாகவும், வேகமாகவும் நடந்துகொள்வர். இவர்களின் கட்டுக்கோப்பான செய்கைகளால் மற்றவர்கள் எரிச்சல் படுவர். பணம் கையில் இல்லாவிட்டால் கடன் பட்டாவது தன் விருப்பங்களை, விலை மதிப்புள்ள உயர்ந்த பொருட்களை வாங்கிவிடும் படாடோப டாம்பீகம் கொண்டவர்கள். வெளி உலகிற்கு சிறிதும் வசதி குறையாதவர்களாகவே தெரிவார்கள். இதில் இயற்கையும் அவர்களுக்கு சேர்ந்து துணை புரியும், அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
ஊதா நிறம் விரும்பும் பெண்கள் . . . அடுத்த மாதம் . . .