கருத்த மேனியருக்கு நீலத்தை தனிப்பட்ட (ப்ளையின்) வண்ணமாக அணியாமல் வெண்மை, இளமஞ்சள், இளஞ்சிவப்பு, இளம்பச்சை போன்றவற்றுடன் எந்நேரமுல் அணியலாம். பகல், மாலை, இரவு வேலைகளுக்கும் மிக நன்றாக இருக்கும். உங்களுக்கு அழகுக்கு அழகூட்டும். தனிக்கவர்ச்சி அம்சமாகத் தெரிவீர்கள். ஏனென்று தெரியாமல் மற்றவர்கள் குழம்புவார்கள். உங்களுக்கு இந்த உடை அத்தனை அழகாகப் பொருந்தும். பகலிலும் நல்ல பிரகாசமாக இருந்து இந்த நீல வண்ணத்தில், பூக்கள் பல வண்ணங்களில் உங்களை ஜொலிக்க வைக்கும்.
மாநிறத்தவருக்கும், சிவந்த மேனியுடையோருக்கும் இந்த வண்ணம் ஒரு தேவதையாகக் காட்டும். ‘இவள் அழகா? இவள் புடவை அழகா?’ என்று கேட்க வைக்கும். ஆண்களுக்கும் இள நீலக்கலர், டார்க் நீலக்கலர் ஒரு ஹீரோவாகக் காட்டும். நீலக்கலருக்கு எதிரான கலராக கறுப்பு வண்ணம் பாந்தமாகப் பொருந்தும். கவர்ச்சி அம்சமாக விளங்கும். வானத்திலிருந்து வந்த தேவதையாகக் காட்டும். நீல நிறத்தில் எந்த டிரெஸ் மெட்டீரியலும், ரெடிமேட் உடைகளிலும் நீலம் கலந்த வண்ண உடை இளம் பெண்களுக்கு அவர்களின் வயதை இன்னும் குறைத்துக் காட்டவல்லது.
கறுப்பும் நீலமும் ஒரு வித்தியாசமான உடையாகவும், பார்ப்போரைக் கவர்ந்து இழுக்கும்படியாகவும் உங்களின் நிறத்தை மிக எடுப்பாகக் காட்டவல்லது. வெள்ளையோடு கலந்து அணியும்போது மற்றவர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். உங்களைப் பற்றிய மதிப்பீடு நிறைய மதிப்பெண்களை உங்களுக்கு வாங்கித் தரும்.
படைப்பாளிகள் நீலக் கலரைப் பற்றி இலக்கியங்களிலும், கவிதை படைப்புகளிலும் ஏகத்திற்கும் வர்ணித்து வழங்கியிருக்கிறார்கள். இந்தக் கலரை அணியும் பெண்களை கற்பனையிலும், ஏகப்பட்ட கதைகளில் வர்ணனைகளிலும் ‘தேவதையைப் போன்ற அழகான பெண்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் நீலக்கலர் ஒரு சிறப்பன தனி இடத்தை வரலாற்றில் பிடித்திருக்கிறது. எல்லோரும் எக்காலமும் அணிய ஏற்றது இந்த நீல நிறம். குறிப்பாக நீல பனாரஸ் பட்டு ஓர் உயர்வான அழகைக் கொடுக்கும்.
இண்டிகோ நிறம் . . . அடுத்த மாதம் . . .