நீலம் தெய்வீக உணர்வு, உண்மை, உடன்பாடு போன்றவைகளைக் குறிக்கிறது. தெய்வபக்தியில் நீலம் முக்கிய இடத்தை வகிக்கிறது. வட நாட்டவர்கள் நீல நிறத்தை கடவுளின் நிறமாக அதாவது, கண்ணனின் நிறமாகக் கருதி நீலவண்ணக் கண்ணனாக வழிபடுகிறார்கள். கடவுள்களின் உடலின் தோல் நிறம் எனக் கருதி வழிபடுகிறார்கள். கிருஷ்ணன் பெயர் கொண்ட இந்தக் கடவுள் நீல நிறமாக இருப்பதாகப் பல புராணங்கள் கூறுகின்றன.
நீலம் நரம்புத் தளர்ச்சியைக் குறைத்து அவற்றிற்கு வலுவூட்டுகிறது. தியானம் செய்யும்போது நீல நிற உடையணிந்தால் தெய்வீக சூழ்நிலைக்கு இந்த நிறம் இலகுவாக நம்மை இயல்பாகக் கொண்டு சென்று நம் தியான செயலுக்குத் துணை செய்யும்.
நீல நிற உடைகள் . . . அடுத்த மாதம் . . .