நமக்கு அடிக்கடி அல்லது சில சமயங்களில் என்று பல காலகட்டத்தில் போர் அடிக்கும். தொய்வடையும் நிலை ஏற்படும். ஏதாவது ஒரு வித்தியாசம் வாழ்க்கையில் தேவைப்படும். அப்போது இந்த நீல நிறம் தரும் உற்சாகம், புத்துணர்ச்சி – ஒரு பொங்கும் புதுப்புனல் எனலாம். அந்த வகையில்தான் சிலவகை குளிர்பானத் தயாரிப்பாளர்கள்கூட புதுவகைப் பானம், புதுக்கலர் என இந்த வகைகளில் புதிதாகத் தயார் செய்து விளம்பரத்திலும் அதன் கலரை மிக இயற்கையாக (நேச்சுரலாக) விளம்பரம் செய்கிறார்கள். மாத்திரை வடிவில், டிரெஸ் மெட்டீரியல், பேனா, புத்தக அட்டைகள், சீசன் கார்டுகள், பல எலக்ட்ரானிக்ஸ் வயர், பல்புகள், பிளாஸ்டிக் பூங்கொத்துகள் என அனைத்திலும் புதுமையாகச் செய்திட எண்ணி மக்களின் தொய்வடையும் எண்ணங்களைப் புரிந்து செய்யும் திறமையான வியாபாரிகள்தான் இந்த நீல வண்ண பொருட்கள் தயாரிப்பாளர்கள். மனோதத்துவம் அறிந்த நல்ல வியாபாரிகள், தொழிலதிபர்கள் என்று இவர்ர்களைச் சொன்னால் மிகையாகாது. அதாவது ஒரு மாற்றம் வேண்டும் என மனம் எண்ணும் சமயம் இந்த நீல வண்ணம் அதை ஈடு செய்து மக்களின் மனதைக் கவர்ந்து விடுகிறது.
ஓவியங்களில் உயர்மட்டத்தில் நல்ல ரசனையையும் இந்த நிறத்தை வரைபவர்களுக்கு ஒரு சந்தோஷ எண்ணங்களையும் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது. குழந்தைகள் இந்த நிறத்தை கடல் நீருக்கோ வானத்திற்கோ வரையும்போது குதூகலமாக வரைந்து ரசனையைக் காட்டுவார்கள். படைப்புத்திறனை வளர்க்கக்கூடியது என்றாலும் மிகையாகாது. இந்த வண்ணத்தைப் பெரிய ஓவியர்களோ குழந்தைகளோ வரைகலையில் பயன்படுத்தும்போது அவர்களுக்கு மேலும் மேலும் வரையத் தூண்டும், படைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கூட்டவல்லது.
நீல நிறத்தின் நன்மை அடுத்த மாதம் . . .