ஆண்களுக்கு மத்தியில் பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்த்தைக் கொடுக்கும் திறன் நீல நிறத்திற்கு இயற்கையாகவே அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. நீல நிறப் பட்டுப்புடவை கவர்ச்சியானது. உடுத்துபவர்களும் உடுத்தியிருப்போரைப் பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தைத் தரும். அவர்களைச் சுற்றி ஒரு சுறுசுறுப்பான சூழல் நிலவும். பொதுவாக இதை ஒரு டானிக் என்றே சொல்லலாம். பெண்ணாக இருந்தால் அவள்தான் அங்கு ஜொலிக்கும் நட்சத்திரம்.
நீலம் பெண்களின் ஆசாபாசங்களை மற்ற நிறங்களைவிட மிக ஆழப்படுத்தும் தன்மை கொண்டது. சந்தோஷத்தின் உச்சிக்கும், பொறுமையின் ஆழத்திற்கும் செல்வர். இதுபோன்ற இரு வேறுபட்ட உணர்ச்சிகளின் விளிம்பிற்கே செல்வதால் அதிகக் குழப்பத்திற்கும் ஆட்படுவர். அவர்களின் விருப்பு வெறுப்புகளே என்ன என்று தெரியாத அளவு குழப்பத்துக்கு உள்ளாவர். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சுவார்கள். இதனால் மற்றவர்களின் பரிதாபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் மற்றவர்களின் அனுதாபம் இவர்களின் தவறான முடிவுகளிலிருந்து இவர்களைக் காப்பாற்றும்.
இவர்கள் அடுத்தவர்களின் முன் தோல்விகளை ஏற்றுக்கொள்வதைப் பெரிய அவமானமாகக் கருதுவர். எதிலும் வெற்றிதான் கிடைக்க வேண்டும், எதுவும் சரியாக அமைய வேண்டும் என்ற மூடநம்பிக்கைகள் உள்ளவர்கள். தான் செய்த தவறுகளால் நேர்ந்ததென்றாலும் சரி, மற்றவர்களால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் தோல்விகள் உண்டானாலும் சரி, தாயத்து, திருஷ்டி, மந்திரம் இவைகளால் தீர்ந்துவிடும் என்றும், கடவுளைக் கும்பிட்டால் சரியாகும் என்ற தவறான கொள்கை, நம்பிக்கைகள் உள்ளவர்கள். மனித முயற்சியினால் ஒன்றும் இல்லை எல்லாம் நேரம்தான் என்று வாழ்க்கையை மிக குழப்பமானதாக்கிக் கொண்டு, கத்தியும் கூச்சல் போட்டும் குடும்பத்தில் அடிக்கடி அமைதியில்லாமல் செய்து அனைவரையும் நோகடிப்பர்.
வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோஷமாகவே வாழவேண்டும், இதுதான் வாழ்க்கை என்று எண்ணும் அறியாமையினர் நீல விரும்பிகள். சிறு பிரச்சனைகள் என்றாலே மிக வேதனை அடையும் இவர்களிடம் இயலாமைக் குணம் மிகுதியாக இருக்கும். பொறாமைக் குணம் உடையவர்களாகவும் இருப்பதால், அடுத்தவர்களின் முன்னேற்றம், வெற்றி இவர்களை நிறைய மனதளவில் பாதிக்கும். நாம் எப்பொழுது அந்த நிலைக்கு வருவோம், வருவோமா மாட்டோமா என்றெல்லாம் குழம்பி, பொறாமையின் உச்ச நிலைக்குச் செல்லும் பொறுமையற்றவர்கள். மற்றவர்களின் நல்ல செயல்களைப் பாராட்டமாட்டார்கள். அடுத்தவர்கள் பாராட்டினாலும், மனதிற்குள்ளே குமுறுவார்கள். அனாவசியமாக அவர்களின் சந்தோஷத்தை அவர்களாகவே கெடுத்துக்கொள்வார்கள்.
வியாபாரத்துறையில் நீல நிறம், அடுத்த மாதம் . . .