கலகலப்பாக பழகும் இயல்பு படைத்தவர்கள். இவர்களுக்கு நண்பர்கள், சிநேகிதிகள் அதிகமிருப்பர். இவர்கள் பெண்களைக் கவரும் காந்த சக்தி படைத்தவர்கள். பல பெண்கள் எளிதாக இவர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இவர்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டாலும் தங்கள் வாழ்க்கையும், உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகாமலும், குடும்பமும் பாதிக்காமல் தங்கள்ள உல்லாச நட்பு, லீலைகளில் ஈடுபடுவார்கள். குடும்ப அமைதி, உற்சாகம், குதூகலம் இதனால் சிறிதும் பாதிக்கப்படாது. இளவயது திருமணமே பலருக்கு ஏற்படும்.
பெண்களைப் பாதிக்கும் அளவிற்கு நீலநிறம் ஆண்களைப் பாதிக்காது. ஆண்களின் மேல் நீல வண்ணம் அவ்வளவு தாக்குவதில்லை. சுய பச்சாதாபத்தாலும், வாழ்க்கையில் பணம் பண்ணவேண்டும் என்ற கட்டாயமும் இவர்களின் குழப்பத்தைக் குறைத்துவிடலாம். இவர்கள் ஒருவித உற்சாகத்திலேயே உழைப்பவர்கள். சீராக, பொறுமையாகச் செய்ய வேண்டிய வேலைகள் எல்லாம் இவர்களுக்குக் கடினமாகத் தோன்றும். அவசரமாக தடாபுடாவென்று வேலைகளைச் செய்வர். பொறுமையாகச் செய்யும் வேலைகள் இவர்களுக்கு கைவராது. மலைப்பாகத் தெரியும். எதையாவது ஒன்றிரண்டு வேலைகளுக்குமேல் இழுத்துப் போட்டுகொண்டு சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசரக்காரர்கள். பல வேலைகள், விதவிதமான வேலைகளைச் செய்து நிறைய அலைச்சல் படுவார்கள். அதனால் ஆழ்ந்த தூக்கம் வரும். படுத்தால், தூங்கினால் உலகத்தில் எது நடந்தாலும் இவர்களுக்குத் தெரியாது. திருடர்களுக்கு மிகவும் பயப்படுவார்கள். ஓடி ஓடி பல வேலைகளைச் செய்து, சம்பாதித்து கொஞ்சமாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும், உயிர் பிழைத்தால் போதும் எனத் திருடனுக்கு பயந்து விட்டுக் கொடுத்துவிடும் பயந்த சுபாவம் உடையவர்கள்.
இவர்களில் சிலர் வெவ்வேறான வேலைகளை மேற்கொள்வதினால் பலத்தரப்பட்ட மக்களைச் சந்திப்பார்கள். வித்தியாசமானவர்களிடம் பழகி அவர்களிடமிருந்து பலவற்றையும் கற்றுக்கொள்வார்களா? என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் அறிவை விருத்தி செய்துகொள்ள இவர்கள் சம்பாதிக்கவோ, பலத்தரப்பட்ட மக்களிடம் பழகுவதோ இல்லை. பணம் சம்பாதிக்க மட்டுமே என்றபடியால் மற்றவர்களிடம் நாகரீகமாகப் பண்பாகப் பழகத்தெரியாது. ஆனால் ஓரளவுக்கு அடுத்தவர்களுக்கு உதவும் குணம் இவர்களை நல்லவர்களாக வெலி உலகுக்குக் காட்டும், ஆனால் போராட்ட மனமும் உளைச்சல் மனமும் கொண்டவர்கள் எல்லாம் தொழில், வேலை சம்மந்தமாக சீக்கிரம் முன்னேறவேண்டும் என்ற காரணத்தினால்தான் மனதிற்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்வார்கள். சீராக இதுதான் இவர்கள் குணம் என்று காணமுடியாதபடி நாளுக்கு நாள் மாறுபடும்.
நீல நிறம் பயன்படுத்தும் பெண்கள், அடுத்த மாதம் . . .