இந்த வண்ணம் கறுத்த மேனியருக்காகட்டும், மாநிறத்தவருக்காகட்டும், நல்ல சிவந்த மேனியருக்காகட்டும் அழகைத் தரவல்லது. பகல், இரவு எந்த நேரத்திற்கும் ஏற்ற வண்ணம்.
கவனத்தில் கொள்ளவேண்டியது: எலுமிச்சை மஞ்சளோ, நல்ல பிரகாசமான மஞ்சளையோ கறுத்த மேனியர் உடுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கறுத்த மேனியருக்கு வெந்தய வண்ணம் எனும், (மஸ்டர்டு) வெளிர் மஞ்சள் பொருத்தமாக இருக்கும், மாம்பழக்கலர், பொன்னிற மஞ்சள் எல்லாம் இவர்களின் கறுத்தமேனிக்கு கவர்ச்சியூட்டி அவர்களை அழகான பெண்களாகக் காட்டும்.
ஆண்களுக்கும் இந்த நிறங்கள் நிரம்பவே பொருந்தும். பகல் நேரத்தில் இவர்களுக்கு இது எடுப்பாகக் காட்டி அழகைக் கூட்டவல்லது. இரவு நேரத்திற்கு இது அத்தனை பொருத்தமாக இருக்காது. இந்த வெந்தயக் கலரான டல் மஞ்சள் இவர்கள் உடுத்தியிருக்கும்போது இவர்கள்மேல் பொது இடங்களில் தனிமரியாதையை ஏற்படுத்தும் தன்மை பெற்றது. நல்ல எண்னங்களை இவர்கள்மேல் மற்றவர்கள் கொண்டிருக்கும்படி செய்யும்.
மாநிறத்தவரும், சிவந்த மேனியரும் செந்நிறம் கலந்த மஞ்சள் வண்னத்தையும் மேலே குறிப்பிட்ட மஸ்டர்டு கலர் புடவைகளையும் உடுத்தும்போது இவர்களின் நிறத்தையும் அழகையும் மேலும் மெருகேற்றி இவர்களைப் பொன்னாக ஜொலிக்க வைக்கும். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த நிற உடை அலங்காரத்துடன் நீங்கள் வெளியே கிளம்பலாம். பொன் மஞ்சளைப்போல் ஒரு சரியான பொருத்தமான வண்ணம் சிவந்த மேனியருக்கும் மாநிறத்தவருக்கும் சோபிப்பதுபோல் வேறு நிறம் சோபிக்காது என்றே சொல்லலாம். இந்த நிறத்தால் இவர்கள் நிறம் அதிகமாகத் தெரிகிறதா இல்லை இவர்களால் இந்த நிறத்திற்கே அழகா என்ற கணக்கில் பார்ப்பவருக்கும், உடுத்தியிருப்போருக்கும் தெரியும்.
பச்சை நிறத்தின் தன்மை பற்றி அடுத்த மாதம் . . .