புத்தகக் கடைகளில் நம் கண்களை ஓட்டினால் மஞ்சள் நிறத்தோடு கூடிய எந்த நிறமாகட்டும் அந்த அட்டை நம்மைக் கவர்ந்து புத்தகத்தில் லயித்து அதை எடுக்கத் தூண்டும். அந்த புத்தகத்தின் மஞ்சள் நிறம் நம்மை அறியாமலே எடுத்துப் படிக்கத்தூண்டும். அதை வாங்கும்போது மனதைச் சாந்தப்படுத்தி கடைக்காரர்களிடம் நமக்கு ஒரு அமைதியான உறவை வளர்க்கும், ஆர்வமும் துடிப்பும் ஏற்படும். மனதை உற்சாகமாக வைத்து வியாபாரத்தையே வெற்றியாக்கும் திறன் கொண்டது.
விற்பவர்கள், வாங்குபவர் இருவருக்குமே இது பொருந்தும் வழித்தடங்கள் மஞ்சளாயிருந்தால் செல்வதற்கு இலகுவாக மனம் லேசாகி சீக்கிரம், அதே சமயம் கவனச்சிதறல் ஏற்படாவண்ணம் செல்ல உதவுக்கிறது. டென்ஷன் ஏற்படாவண்ணம் அமைதியாக ஓட்டமுடியும். பொருட்களை சுமந்து செல்லும் வண்டிகள் மஞ்சள் நிறமாயிருந்தால், பளிச்செனத் தெரிந்து ஆபத்துக்களைத் தவிர்க்கும்.
ஹோட்டல்களிலாகட்டும், வீட்டிலாகட்டும் பசியைத் தூண்டுவதே மஞ்சள் நிற பொன்னிற வடைகளும், சாம்பார் குழம்பு கூட்டுவகைகளும்தான். சமையலில் முக்கிய பங்கே மஞ்சள்தானே. மஞ்சள் இல்லாத சமையல் சோபிக்காமல் அருவெறுப்பாய் பார்க்கத் தூண்டும். குழம்பு கூட்டு கறிகளுக்கு மிக அத்தியாவசிய கலர்.
சமையலறைகளில் மஞ்சள் வண்ணம் முக்கிய இடம் வகிக்கிறது. உதாரணத்திற்கு மஞ்சள் பொடியே வேண்டாம் என்று நினைத்தாலும் சிறிது சேர்க்கலாமே என அந்த நிறம்தான் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும். அதனால்தான் மஞ்சளை உபயோகிக்கிறோம் என்பதுதான் உண்மை. மஞ்சள் நன்மை பயப்பது, உடலுக்கு நல்லது. மஞ்சள் போட்டுத்தான் சமைக்க வேண்டும் என்ற கட்டாயங்களை விட மஞ்சள் என்ற நிறம் “என்னை சமையலில் சேர்” என்று நம்மை உற்சாகமாக சமைக்க வைத்து சமையலில் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பதே உண்மை. நிற ஆய்வாளர்களும் இதைத்தான் மன ரீதியாக ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.