சூரிய வெளிச்சம் குறைவான, மங்கலாகத் தெரியும் அறைகளில் அடிக்கப்படும் மஞ்சள் நிறம் வெளிச்சத்தையும், மன சந்தோஷத்தையும் தரும். சமையலறை சுவர்களுக்கு மஞ்சள் நிறம் ஏற்றது. மஞ்சள் நிற கர்ட்டன் தொங்கவிட்டால் சமையலறையில் ஈ, கொசு வருவதைத் தடுக்கலாம். ஆரோக்கியத்தின் சாயலைக் காட்டும், அழகு சமையலறையாக இருக்க இது உதவும்.
மஞ்சள் வர்ண டப்பா, பாட்டில்களில் சமையலறை மற்ற இதர பொம்மைகள், பைகள், பிளாஸ்டிக் பூக்கள், அறையை அலங்காரப்படுத்தும் பொருட்களாகட்டும், படுக்கை விரிப்புகளாகட்டும், உங்கள் வீடு, அலுவலகம் எங்கும் மஞ்சள் வர்ணம், ஒரு பாதுகாப்பையும், மூளை நரம்புகளுக்கு சுறுசுறுப்பையும், ஆழ்ந்து சிந்தித்து நல்ல முடிவெடுக்கும் மன அமைதியையும் தரவல்லது.
சுவருக்கு மஞ்சள் வண்ணம் அடித்திருந்தால் குழந்தைகளிடம் அடம் பிடித்து அழும் குணத்தை ஏற்படுத்தும். அவர்களின் ஓயாத காரணமில்லாத அழுகைக்கு இந்த மஞ்சள் வண்ணமே காரணம். கோபத்தில் முரண்டு பிடிப்பது அல்லது பெரியவர்கள் சிறியவர்கள் யாராகட்டும் இந்த நிறம் கோபத்தின் காரணமாக ஏற்படும் அலர்ஜியை உண்டாக்கும். அலர்ஜியால் ஏற்படும் கோப குணத்திற்கு மஞ்சள் வண்ண அறைகளே காரணம். இருந்தாலும் பொதுவாக சிறிது வெளிரிய மஞ்சள் வண்ணம் அறையைப் பிரகாசிக்கச் செய்யும். மருத்துவமனை, வீடு, சமையலறை, அலுவலகம் முதலிய இடங்களுக்கு மஞ்சள் வண்ணம் பிரகாசத்தைத் தரும்.