பொன்மஞ்சள் போட்டிருப்பவரைப் பார்த்தால் உங்களுக்கு அவருடன் நட்பு கொள்ளத்தூண்டும். சிவந்த நிறமுடையவர்களுக்கு மிக பாந்தமான பொருத்தமான நிறம். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், கடவுளிடம் ஒரு பயந்த உணர்வைக் கொண்டவர்களும், கடவுளிடம் ஒரு பயந்த உணர்வைக் கொண்டவர்களும், இதை உபயோகிப்பவர்களாக இருப்பார்கள். மேலும் சில பெரிய மனிதர்களிடம் பழகும்போது தன்னம்பிக்கை இல்லாதவராக அவர் நம்மை என்ன நினைப்பாரோ, உதவுவாரோ மாட்டாரோ என்ற அவநம்பிக்கையுடையவர்களின் எண்ண வெளிப்பாடு எலுமிச்சை மஞ்சள். இதை உபயோகிப்பவர்கள், கெட்ட விஷயங்கள் நம்மை அணுகாது, அணுகக்கூடாது என்ற மூடநம்பிக்கைகளும் உடையவர்கள்.
கடவுள் பக்தர்களுக்கு வர்ணப்பூச்சாகப் பயன்படுகிறது. அவர்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையிராது. உழைத்தால் முன்னேறலாம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள். கவலை, பற்று, ஏக்கம், ஆர்வம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். ஒளிவு மறைவு இன்றி மிக வெளிப்படையாகப் பேசும் இவர்கள் மற்றவர்களைப்பற்றி நல்லதோ, கெட்டதோ எதுவாயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள். இதில் சில சமயம் வீண் விரோதங்களையும் சம்பாதித்துக்கொள்வார்கள். அதில் கவலை கொள்வார்கள்.
மற்றவர்களிடம் பழகும்போது மிகவும் பாசத்துடனும், பற்றுடனும் பழகும் பண்பு உடையவர்கள். மரியாதையாகப் பழகும் இவர்கள் அன்பு உள்ளம் நிறைந்தவர்கள். சிரமப்படுபவர்களுக்கு வலியச் சென்று உதவி செய்வார்கள்.
எதையும் நுணுக்கமாகவும், எளிதாகவும் கற்று அதில் நிபுணராக விளங்குவார்கள். அறிவும், கேள்வி ஞானமும் கொண்டு தெரியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்று சொல்லும்படித் திகழ்பவர்கள். இவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என மற்றவர்கள் வியந்து பாராட்டும்படியான, கவர்ச்சியான மனிதர்கள் மஞ்சள் விரும்பிகள். எதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் உடைய இந்த வித்தகர்கள் எதிலும் தலைமை பொறுப்பை ஏற்கத்துடிக்கும் பிடிவாதக்காரர்கள். அதில் ஆர்வம் அதிகம் காட்டி வெற்றியும் காணும் வல்லமையுடையவர்கள்.
பொதுவாக சமூகத்தில் மதிக்கப்படுபவர்கள்தான் மஞ்சள் நிறமிகள். கற்பனா சக்தி நிறைந்தபடியால் எழுத்தாளர்களாகவும், எதையும் ரசிக்கும் திறனும் நிரம்பப்பெற்றவர்கள். நரம்பு முறுக்கேறியவர்கள். தூய எண்ணமுடையவர்கள். உலகத்தின் உதவியை நாடுபவர்களாகவும், அது எளிதில் இவர்களுக்கு வலிய கிடைக்கும் ஆற்றலும் பெற்றவர்கள் எனலாம். சொல்லியபடியே செய்து முடிக்கும் வாக்கு தவறாதவர்கள். பெரிய பெரிய விஷயங்களைச் செய்ய மிக தீர்க்கமாக அவர்களுக்குள்ளேயே திட்டமிடுவார்கள். செய்தபின்தான் வெளியே தெரியும். இவர்களின் அசத்தும் திறமைகளுக்கு எல்லாம் மிக அடக்கமும் பண்பும்தான் காரணம். கூச்ச சுபாவமுள்ளவர்கள். ஆனால் பழகிவிட்டால் இவர்களைப்போல் தைரியமானவர்கள் யாருமில்லை எனலாம்.
கண்ணியமான இவர்களது புத்திக்கூர்மை பாராட்டும்படியும், வியக்கும்படியாகவும் இருக்கும். மிக்க புகழுடன் விளங்குவார்கள். இது நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் பெரிதும் பொருந்தும். இளவயதில் இவர்கள் மற்றவர் கண்களுக்கு அத்தனை பிரபலமாக இருக்கமாட்டார்கள். பிறருக்குத் தீங்கு இழைக்க இவர்கள் மனம் இடம் கொடாது. கடவுள் நம்பிக்கையே இதற்குக் காரணம்.
பெரும்பாலோர் கடவுளை நம்பி, அதிகம் வருந்தி தீப தூப ஆராதனைகள் செய்யமாட்டர்கள். ஆனால் கடவுள் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது, எல்லாம் அவன் அருளால் என தன் உழைப்பையே கடவுள் என நம்பும் தீர்க்கதரிசிகள்.
இவர்கள் உணவு விஷயத்தில் மிகக் கட்டுப்பாடாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அஜீரணக் கோளாறு எதுவும் ஏற்படாது. எனினும் பித்த சம்பந்தத் தலைவலி, லேசான தலைச்சுற்றல், கல்லீரல் பாதிப்பு போன்ற சில வியாதிகள் இவர்களைத் தொல்லைப்படுத்தும். மஞ்சள் நிறம் பிடித்தவர்கள் சிவப்பு நிறத்தை உபயோகித்தால் மனதில் குழப்பங்கள், நிம்மதியின்மை, உடல் தளர்ச்சி, காரியத் தோல்விகள் ஏற்படும். உடுத்தியிருக்கும் உடையை சிவப்பு நிற உடையை ஏன் உடுத்தினோம் என்ற கேள்வியுடனும் அதை மனம் கொள்லாமல் நினைத்தும் தவித்தபடியே இருப்பார்கள். இவர்கள் சிவப்பை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சில ஆபத்துகளும், உடல் கோளாறுகளும் ஏற்பட்டுப் பல பிரச்சனைகளுக்குள்ளாக நேரிடலாம். அதனால் இதைத் தவிர்த்தல் நலம்.
மஞ்சள் நிறமிகள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தலைமை பொறுப்பிலோ, நிர்வாக இயக்குனராகவோ அல்லது தனித்திறமையுடன் தன் சொந்த முயற்சியால் உழைப்பால் முன்னணியில் சிறப்புப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். இந்த நிறத்தில் உடை அணிந்து சென்றால் (பிடித்தவர்களுக்கு மட்டும்) காரியம் வெற்றியடையும். அதிகாரத் தோரணையும், அந்த மாதிரிப் பதவிகளிலும் இருக்கும் இவர்கள் அரசாங்கத் தொடர்புடைய பதவிகளில் காணப்படுவார்கள்.