வியாபாரத்துறையில் ஆரஞ்சு நிறம்
ஆரஞ்சு வண்ணத்தை மற்ற வண்ண விரும்பிகள் இது என்ன கலர், என தனித்து நிறுத்தி இதோடு மனம் ஒட்டாமல் ஒருவித அருவருப்புடன் பார்ப்பார்கள். மேலும் இதன் சிறப்பு என்னவென்றால் ஆரஞ்சு நிற ஒளியுள்ள பல்ப் வெளிச்சம் தாவரங்களின் வளர்ச்சியை துரிதமாக வளர்க்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டு காய்கறித் தோட்டங்களில் ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆரஞ்சு வண்ண கூடாரமாக இட்டு ஆரஞ்சு நிற பல்ப் வெளிச்சம் இரவில் ஒளிரும்படிப் போட்டு தோட்டங்களில் வளரும் பூ, காய்கறிகள் வேகமாக வளர்வதைக் கண்டுபிடித்துள்ளனர். தாவர வகைகளுக்கு மிகுந்த பயன் தருகிறது என உலகில் பல தோட்டக்கலை நிபுணர்களும் ஆராய்ந்து கூறியுள்ளனர்.
ஆரஞ்சு நிறத்தின் நன்மை
ஆரஞ்சு-சிவப்பு, மஞ்சள் நிறக்கதிர்கள் இணைந்தது. இது நுரையீரலை விரிவுபடுத்துகிறது. பல்ஸ் பீட்டை அதிகரிக்கிறது. ஆனால் இரத்த அழுத்தத்தைப் பாதிப்பது இல்லை.
குழந்தை பெற்றபின் ஒரு தாய் ஆரஞ்சு நிற உடைகளை அணியவேண்டும். இதனால் மார்பகங்களில் பால் அதிகம் சுரக்க வழிவகுக்கும். ஆரஞ்சு வண்ணப்பொருட்கள் உடைகள் கண்ணில் படுமாறு வைத்தாலும் தாய்க்கு நல்ல பலன் கிட்டும். மண்ணீரல் மற்றும் கணையத்தின் ஜீரண சக்திக்கு இந்நிறம் உதவுகிறது.
இந்நிறம், இனவிருத்தி உறுப்புகளில் உள்ள இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவல்லது. மேலும் இதன் சிறப்பு யாதெனில், இந்த வண்ண உடையுடன் கழுத்தில் இதன் நிறத்தில் மணிகளை அணிந்தால் பாடகர்களின் குரல் இனிமையாக இருக்கும். மூக்கில் உள்ள புண் போன்ற பிரச்சனைகளையும் தீர்த்து, காய்ச்சல், நீண்டகால உடல் உஷ்ணம் போன்ற பல நோய்களையும் தீர்க்கக்கூடிய திறன் படைத்தது ஆரஞ்சு வண்ணம். மூளைக்கு நிறைய ஆக்ஸிஜன் செல்ல உதவும் நிறம் இது. மிக நுட்பமாக சிந்திக்கவும் உதவும்.
ஆரஞ்சு நிறத்தின் தீமை
கால், கை வலிப்பு சிறுநீரகங்கள், மூட்டுவாதம், புற்றுநோய் ஏற்படும். பலருக்கு பெண்களின் நோய்கள், சுழற்சி, மன அழற்சி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும்.
ஆரஞ்சு வண்ண உடைகள் பற்றி அடுத்த மாதம் . . .