இதமான நட்பு கொள்ளும் மென்மை உள்ளம் படைத்தவர்கள். நட்பை எப்போதும் ஒரே சமமாக இருக்கும்படியான நிலையில் பாதுகாக்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள். நண்பர்களிடம் அதிக நெருக்கமும் இல்லாது அவர்களை முழுவதும் துண்டித்துக்கொள்ளவும் செய்யாது நடந்துகொள்ளும் இயல்பினர். சந்தோஷமான விஷயங்களில் நம்பிக்கையோடு முழுவதுமாக அனுபவித்து ரசிக்கும் உணர்ச்சியுடையவர்கள்.
சிலசமயம் கோபப்பட்டாலும் சடுதியில் மறந்து மன்னிக்கும் குணமுடையவர்கள். மனதில் வைத்து பழிவாங்கும் எண்னமெல்லாம் இல்லாதவர்கள். பழக இனிமை கலந்த நற்குணமுடைய கவர்ச்சி அம்சம் உள்ளவர்கள்.
இவர்கள் இயல்பாகப் பழகுவதைத் தவறாக எண்ணி, கெட்ட எண்ணங்களுடன் நடந்து கொள்வார்கள் சிலர். அவர்களிடம் கோபப்பட வேண்டி வரும்போது துணிந்து எதிர்த்து பேசி, தவறைக் கண்டிப்பர். துணிந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதற்கேற்ப நடந்துகொள்ளும் தைரியமிக்கவர்கள்.
ஆரஞ்சு நிறம் – வியாபாரத்துறையில், நன்மை, தீமைகள் அடுத்த மாதம். . .