எல்லா உணர்வுகளையும் சமமாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம். பொறுமை, பாசம், எதிர்கொள்ளல் போன்றவைகளில் சமமாக பாவித்தாலும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போவார்களா என்றால் கிடையாது. இவர்களிடம் குழந்தைகள் அலாதிப் பிரியம் வைத்து விளையாடுவார்கள். குழந்தைகளோடு குழந்தைகளாக அவர்களாகவே மாறிவிளையாடுவார்கள். அதனால் குழந்தைகள் இவர்களை விட்டு விலகாமல் ஒட்டிக்கொள்வார்கள். சில விஷயங்களுக்கு அதிக இடம் கொடுக்க ஏதுவாகிவிடும். அடம் பிடிக்கும் பிடிவாத குணத்தில் கொண்டு சென்றுவிடும். இவர்களின் குழந்தைத்தனம். அப்போது விழிப்புணர்வு வந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இது இவர்களின் இயல்பான குணம்.
பயனற்ற விவாதங்களை மிகவும் வெறுப்பார்கள். காலத்தையும் வீண் பேச்சையும் விரும்பாத இவர்களுடன் நட்பு கொண்டு பழகுவது எளிதல்ல. காரணம் காரியமாகத்தான் நேரமும், பேச்சும், செயலும் ஓர் இடத்திற்குச் செல்வதும் இருக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். பயனில்லாத செய்கைகள் என்று இவரை யாரும் மதிப்பிட முடியாது. மிகச் சில நண்பர்களே இவர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள். எனினும் அவர்களிடம் உளன்போடு உயிரைக் கொடுத்துப் பழகும் குணமுடையவர்கள். அதைப் பெருமையாகவும் கருதுவார்கள். நிறைய நண்பர்கள் இருப்பது வீண் பொழுதுபோக்கு என்ற கருத்து உடையவர்களாதலால் இவர்களிடம் இதற்காக மற்றவர்கள் நட்பு கொள்ளமாட்டார்கள். இவர்களிடம் நண்பர்கள் சிலர் மிகவும் சந்தோஷமாக உற்சாகம் கொண்டு பழகுவார்கள். இவர்களுடன் இருப்பதைப் பெரிதும் விரும்புவார்கள். சகஜமாக – இதமாகப் பழகும் குணமுடைய ஆரஞ்சு வர்ணம் பிடித்தவர்களில் பெரும்பாலோர் அடுத்தவர் பார்வையைக் கவரும்படியான அமைப்புடைய உடை உடுத்துவார்கள்.
ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் பெண்கள் பற்றி அடுத்த மாதம் . . .