அதிகாரம், கௌரவம், புகழ் இவற்றை விரும்பும் உள்ளங்களுடன், ஆழ்ந்த ஆசையையும், புதுமையாக பலர் போற்ற அபரிதமான அதிசயிக்கத்தக்க அலங்காரத்துடனும், அழகுடனும் இருக்கவும், ஆர்வத்துடன் திகழவும் விரும்புவோரது நிறம் ஆரஞ்சு.
சுற்றுப்புறம், சமுதாயத்தின் எண்ணங்கள், பலதரப்பட்ட மக்களின் நடவடிக்கை இதுபற்றி எதையும் கவலைப்படாமல் தான் என்ற கொள்கையும், நான் சரிதான், என்னைவிட என் பேச்சைவிட சரியானது எதுவுமே இல்லை என்ற கொள்கையும் உடையவர்கள் விரும்பி அணியவும் தேர்ந்தெடுக்கவும் செய்வார்கள். போலித்தனத்தோடு வறட்டு கௌரவம் உடையவர்கள், சிறு செயலைத் தவறான வழியில் செய்ததற்கு நிரம்ப புகழ் கிடைக்கவேண்டுமெனெ எதிர்பார்ப்பார்கள். இவர்களிடம், அவர்கள் நடத்தையைப் பற்றி விவாதித்தால் எனக்கு நிகர் யாரும் இல்லை என தற்பெருமை கொண்டு வீண் அதிகாரங்கள் செய்து (இது கௌரவம் என தவறாக எண்ணி) தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்வார்கள்.
தற்பெருமை உடையவர்கள். இதில் ஏகத்திற்கும் பொய்யிருக்கும், புரட்டிருக்கும் இவர்கள், மக்களை ஏமாற்றித்திரியும் வித்தகர்கள் எனச் சொன்னால் மிகையாகாது.
ஆனால் இவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்த்தால் இந்த ஆரஞ்சு வண்ண விரும்பிகள் பயந்து ஒதுங்கி காணாமல் போய்விடுவார்கள். ஆரம்பத்தில் இவர்கள் கூச்ச சுபாவமுடையவர்கள். காலத்தின், சதிகாரர்களின் எண்ணப் போக்கினாலும், செயல்களாலும், மோசமான நடத்தைகளாலும், போராளிகளாலும், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தன்னை அதில் ஈடுபடுத்திக்கொண்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியவர்கள் ஆரஞ்சு விரும்பிகள். ஆண்களோ பெண்களோ சீக்கிரம் தன்னைப் பல கெட்ட வழிகளில் ஈடுபடுத்திக் கொண்டுவிடுவார்கள்.
வளர்ந்த நடுத்தர வயதுப் பெரியோர்கள் உபயோகிக்கிறார்கள் என்றால் அவர்கள் எண்ணத்தில் ஆரோக்கியமானவர்கள் அல்ல. இது போலிச் சாமியார்களுக்குப் பொருந்தும். இதை ஏமாற்ற சிறந்த வழியாக உபயோகிக்க (சமீப காலமாக) முன்வந்துவிட்டார்கள், ஏமாற்றுப் பேர்வழிகள். சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக ஏமாற்றி நாசமாக்க நினைக்கும் துன்மார்க்கர்கள் அவர்களுக்குள்ளே இருப்பது அவர்களுக்கே தெரியாது. சிறிது சிறிதாக மன ஆதிக்கத்தின் செயல்களுக்கு ஆட்பட்டுத் தன் வாழ்க்கையை நாசப்படுத்திக்கொள்வார்கள். அதிகமாக ஆரஞ்சை விரும்புபவர்கள் மனரீதியாக இந்தக் குணமுடையவர்கள்.
காலத்தின் கட்டாயத்தின் பேரில் இதை உடுத்துபவர்கள் இந்த எண்ணங்கள் உடையவர்கள் அல்ல. பல சாஸ்திரம் சம்பிரதாயங்கள் என அவர்களே தேடிப் போகையில் சில காலங்கள் உடுத்தி, உபயோகித்து பிறகு அதைப் பின்பற்றாமலேபோகும் நிலை உடையவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்.
அடிப்படையில் இது குழந்தைகளுக்குப் பிடிக்கும். பொம்மை, துணிவகைகள், பலத்தரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என அவர்கள் இதைச்க் குதூகலமாக விரும்பி ஏற்பார்கள். குளிர்பானங்கள் இந்த வண்ணத்திலிருப்பதை மிகவும் விரும்பி அருந்துவார்கள். மிட்டாய், பிஸ்கட் வகைகள் ஆரஞ்சு என்றால் புத்துணர்வுடன் விரும்பிச் சுவைக்கும் மனநிலை உடையவர்கள் குழந்தைகள். பழவகைகள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மிக ஊட்டச்சத்து கொண்டதோடு மட்டுமல்லாது நிறைய விட்டமின்கள் நிறைந்ததாயுமிருக்கும்.
நாட்டுப்புறத்திலிருப்பவர்களும், மேம்பட்ட அறிவு இல்லாத்தோர், குறுகிய மனப்பான்மை உடையோர், எதையும் விளக்கமாக, தீர்க்கமாகத் தெரிந்து கொள்ளாதவர்களும் இதில் அடங்குவார்கள்.
மற்றவர்களின் குறைகளைக் கேட்டு நல்லது செய்யவேண்டுமென எண்ணுபவர்கள். அவர்களின் கருத்துக்களைக் கேட்டு நல்ல விஷயமென்றால் பாராட்டுவார்கள். பிறரை வாழ்த்தக்கூடிய நல்லெண்ணமுடையவர்கள். நல்ல உழைப்பு, விசுவாசம், பக்தி, துணிவு, மக்கள் சக்தி, மிகுந்த ஆன்மீக உணர்வு அக்கறை உள்ளம் கொண்ட நாட்டுக்கு நல்லதை நினைத்து செய்ய முன்வருபவர்கள். சேவை மனப்பான்மை அதிக மிக்கவர்கள். ஆனால் . . . இந்த வண்ண உடைகளை சில மோசக்கார போலிச் சாமியார்கள் உலகை ஏமாற்ற தங்களுக்குக் கடவுள் அருள் அல்லது தாங்களே கடவுள்!! அபூர்வ சக்தி படைத்தவர்கள் என்றெல்லாம் வலிய பல கொள்கைகளைப் பரப்பி, சமூகச் சீர்கேடுகளை உண்டாக்க இந்த ஆரஞ்சு வண்ண உடையை (காவி) உடுத்தி வருகிறார்கள். இவர்கள் ஆரஞ்சு வண்ண விரும்பிகள் அல்ல. தன் சுய நலத்திற்கு மக்களை ஏமாற்றுவதற்காக இதை உடுத்துகிறார்கள். இவர்களின் தொழில் முன் சொன்ன நல்ல பல கருத்துக்களுக்குச் சிறிதும் பொருத்தமில்லாதவர்கள். தன் சாமியார் தந்த்திற்கு – துணைக்குத் தேர்ந்தெடுத்து ஏமாற்றும் எத்தர்கள்.
ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் ஆண்கள் பற்றி அடுத்த மாதம் . . .