ஆரஞ்சு வண்ணம் – பாதி சிவப்பும், பாதி மஞ்சளும் கொண்ட கலவை நிறம். இது மற்றவர்களைத் தன்பால் வெகு சீக்கிரம் கவரும் தன்மை கொண்டது. அதாவது கண்களில் பளிச்செனப் பரவி ஈர்க்கும் தன்மையுடையது. பாதைகளில் ஆரஞ்சு உடை உடுத்தியவர் சென்றால் சட்டென நம் பார்வை அவர்கள் மேல் பாயும். அதே சமயம் ‘இதென்ன கலர்’ எனவும், அவர்களை ஒதுக்கிப் பழகக்கூடாத எண்ணத்தை ஏற்படுத்தும்.
செம்மை கலந்த ஆரஞ்சு நிற உடையை, மனம் ஒருமுகப்படுத்த முடியாமல் குழம்பித் தவிக்கும்போது அணிந்தால் நன்மை பயக்கும்.
அந்தி மாலையை ஆரன்சு கலந்த செம்மை நிறத்தில் காணும்போது நம் உள்ளம் பரவசத்தில் மிதக்கும். மாலைப் பொழுதை ரசித்துப் பாடத்தோன்றும். காதல் வயப்பட்டவர்கள், மாலைப்பொழுதின் மயக்கத்தில் கிறங்கிப் போவார்கள்.
இது மண்ணுலகின் ஆற்றலுக்கும், அழகான அதன் சிறப்புக்கும் அடையாளமாகும். ஆரஞ்சு வண்ணம் செயலையும், செம்மை கலந்த ஆரஞ்சு மாலைப் பொழுதையும் நமக்கு உணர்த்தும்.
சக்தியை நிலை நிறுத்தி நம் மன ஆற்றலை சரியான நிலைக்குக் கொண்டு வருவதில் சிறந்த வண்ணம் இது. தியானத்திற்கு இந்த நிற உடையை அணிந்து உடையின் எண்ணத்தை மனம் முழுவதும் பரப்பி, நம் எண்ணங்களை தியானத்தின் ஆற்றலுடன் கலந்து தியான மகிமையைப் பெறலாம்.
ஆரஞ்சு வண்ணம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள் அடுத்த மாதம் . . .