கோயிலில் கடவுளுக்கு அம்மன், பத்ரகாளி, துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு சிவப்பு ஆடை உடுத்தி நமக்கு பயமும், பக்தியும் ஏற்படும் உணர்வை மனரீதியாக புராணங்களிலும், பழங்காலங்களிலும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அம்மன் சம்பந்தப்பட்ட பெண் தெய்வங்களுக்கு வேறு எந்த கலரிலாவது ஆடை அலங்காரங்கள் செய்து இருந்தால் நமக்குக் கடவுளின் மேல் ஒரு பயத்தோடு கூடிய பக்தி ஏற்படாது. சிவப்பு நிறம்தான் நமக்கு அந்த உணர்வை ஏற்படுத்தக்கூடிய முதல் அம்சம்.
ரூபாய் அகலத்திற்கு ஒருவர் சிவப்பு நிறத்தில் பொட்டிட்டிருந்தால் (மனைவி உட்பட) நமக்கு முதலில் அவரை வணங்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும் என்பதை விட முதலில் ஏற்படும் உணர்வு ஒருவித பயம் மட்டுமே.
சிவப்பு நிறம் உடுத்தி அம்மனை வழிபாடு செய்யும்போது ஒவ்வொருவருக்கும் தன்மேல் அம்மன் சக்தி இருப்பதாகவும் உணர செந்நிற ஆடை ஒரு முக்கிய காரணமாக அமைவதுடன், பக்தி மார்க்கத்திற்கு பல பெண் தெய்வத்திற்கும் செந்நிற ஆடையையே தேர்ந்தெடுக்கவும் செய்கிறார்கள். இதைத் தேர்ந்தெடுப்பதன் முக்கிய நோக்கம் – பெண் தெய்வம் நமக்கு அருள் பாலிக்க சீக்கிரம் தன்னிடம் வருவாள், புகுவாள் என்றும் அல்லது நாம் அவளைச் சீக்கிரம் சென்றடைவோம் என்ற பயம் கலந்த மரியாதையும்தான். மேலும், கடவுளைக் கவர்ந்திழுக்கும் வல்லமை, ஆற்றல், பலம் கிடைக்கும் என்றும் நமக்குள் அம்மன் புகுந்து சக்தி கொடுத்து ஆணை அதிகாரங்களைப் பிறப்பிப்பாள் என்றெல்லாம் நம்பிக்கைகளைக் கொடுத்து உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது சிவப்பு நிறம்.
சிவப்பு உடைகளை உபயோகிக்க வேண்டிய இடங்கள் அடுத்த மாதம் . . .