இரத்த ஓட்டத்தில் ஹீமோகுளோபின் குறைந்தவர்கள் சிவப்பு நிறத்தை பல உடைகள், பல பொருட்கள் கன்ணில் படுமாறு உபயோகித்தால்கூட இயற்கையாகவே அவர்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆச்சரியமான ஓர் ஆய்வு முறை இது, பல ஆய்வாளர்கள் கண்டறிந்து நிரூபித்திருக்கிறார்கள்.
எச்சரிக்கை உணர்வைத் தூண்டக்கூடிய பாதைகளில், சாலைகளின் ‘சிக்னல்’ சிவப்பு நிறத்தைக் குறிக்கிறது. போலீஸ் துறைகளில் முன்பெல்லாம், சிவப்பு நிறத் தொப்பிகளைப் பயன்படுத்தி மக்களிடம் ஒரு மரியாதை கலந்த எச்சரிக்கையோடு கூடிய பயத்தை ஏற்படுத்திய பெருமை சிவப்பு நிறத் தொப்பிக்கே. ஆம்புலன்ஸ் தீவிர சிகிச்சைக்கு அவசரமாகச் செல்ல, மக்களை ஒதுங்கி, (வாகனங்களைத் தள்ளிப் போகச் செய்து) வழிவிடுமாறு செய்து, சிவப்பு நிறமுடைய (லைட்) பல்ப் வெளிச்சத்துடன் ஹாரன் செய்த வண்ணம் தன் பணியைச் செய்ய (சிவப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் புத்திசாலிகள்) இன்றுவரை (பயன்படுத்தப்படுகிறது) பயன்படுத்துகிறோம்.
சினிமாத் தியேட்டர்களில் தீயனைப்பானுக்கு சிவப்பு நிறமடித்து நமக்கு எச்சரிக்கை செய்யும் வண்ணம் பார்வையில் படும் இடத்தில் வைத்திருப்பார்கள். ‘உள்ளே’, ‘வெளியே’ செல்லவும் சிவப்பு நிற பெயிண்டினால் எழுதிய கதவுகள் நமக்கு வழிகாட்டும். இது நம் கவனத்திற்கு வழி எது என்று காட்ட உதவும் எண்ணத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல ஒரு செயல்பாடு. வழி தெரிய உதவும் நல்நோக்கத்துடன் அவசர காலத்தில் சீக்கிரத்தில் வெளியேறிச் செல்லவும் பயன்படுத்தப்படும் எண்ணம்தான் சிவப்பு நிற எழுத்து.
சிவப்பு நிறமில்லாத பொருட்கள் நம் அன்றாட வாழ்வில் மிகக் குறைவே. எத்தனை டிசைன் போட்ட சிவப்பு நிற துணிவகைகள், பூ ஜாடிகள், அனைத்து வீட்டு உபயோக பொருட்கள், வாழ்க்கையின் பல அம்சங்களிலும் சிவப்பு நிறத்திற்கே முதலிடம், படைப்புத்திறனுக்கு முதலிடமே சிவப்புதான் என்றால் அது மிகையாகாது.
உற்சாகம் குறைந்துள்ள போது இதை உபயோகித்தால் உற்சாகம் கிடைக்கும். உற்சாகம் குன்றி சோர்வடைந்தபோது சிவப்பு நிற ஆடைகளையோ, பொருட்களையோ கையாளும்போது, மனபாரம், உளைச்சல், கவலை குறைந்து ஒரு வித கிளர்ந்தெழும் சந்தோஷம் பிறக்கும்.
இந்த முறையில்தான் சினிமா பாடல் காட்சிகளை அமைக்கிறார்கள். பல சினிமா பாடல் காட்சிகளில் கதாநாயகி சிவப்பு நிற புடவை அல்ல்து பல நவநாகரீக உடை உடுத்தி டான்ஸ் செய்யும்படி மக்களைக் கவர காட்சி அமைக்கிறார்கள். அவர்களின் சிவந்த, வெள்ளை நிற உடல்வாகுக்கு சிவப்பு நிறம் மேலும் அவர்களின் நிறத்தை அதிகப்படுத்தி ஒரு கவர்ச்சி அம்சமாக நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது! காட்சியும் சிறப்பை பெறுகிறது. பாடல் காட்சியின் முக்கிய அம்சத்தில், இந்த உடையும் மிக முக்கிய அம்சத்தைப் பெற்றிருப்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லாமலேயே காட்சியை ரசிப்போம். ஊன்றிக் கவனித்தால் கதாநாயகன், நாயகியின் உடையலங்காரம் தெளிவாகத் தெரிந்து பொருத்தம் என்ன என்பதைக் காண்பிக்கும்.
இரத்த ஓட்டம் குறைந்துள்ளபோது சிவப்பு நிறத்தை உபயோகித்தால் ஒட்டம் சீர்படும். இதை முக்கியமாகக் கவனத்தில் வையுங்கள். (ப்ளட் ப்ரஷர்காரர்களுக்கு இந்த யோசனை ஒத்துவராது)
சாதாரண உடல்வாகு கொண்டவர்களுக்குத் திடீர் என்று டல்லடிக்க காரணம் இரத்த ஓட்டம் குறைவதுதான். இதனால் உடல் சோர்வு அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அப்பொழுது நாம் நம் கண் பார்வையில் செந்நிற பூக்கள், பொம்மைகள், இன்னும் பலப்பல ஆடைவகைகளிலிருந்து வீட்டின் இதர பொருட்கள் அனைத்தையும் பார்ப்பதின் மூலமும், செந்நிற உணவுவகைகளாலும் இரத்த ஓட்டத்தைச் சீரான நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியும்.
குளிர் காலத்தில் சிவப்பு நிற பல்ப் (Nite Lamp) இரவு நேரங்களில் உபயோகித்தால், குளிரும் உணர்வு ஏற்படாது. நல்ல ஒரு இதமான சூட்டை உண்டாக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தவல்லது. நம் உடல் ரீதியாக, நம் கண்கள் அதைப் பார்ப்பதாலும், ஹார்மோன்களின் துரித நடவடிக்கையாலும், உடல் சூட்டை உணர்ந்து குளிரை உண்டாக்காது.
காதலுக்கு சிவப்பும் ஒரு துணை புரியும் காமத்தை, காதலை வளர்ப்பது சிவப்பு நிறம் என்றால் அது மிகையாகாது. உங்களின் மனைவி சிவப்பு நிற புடவையில் இருக்கும்போது இதை நீங்கள் மிக உணர்வீர்கள். அதுவும் உங்கள் மனைவி சிவந்த நிற அழகி என்றால் கேட்கவே வேண்டாம். சிவப்புச் சேலை உடுத்தி உங்களருகில் வந்தால் நீங்கள் மெய்மறந்து போவீர்கள். காதலோடு கலந்து இணைந்த நிறம். காதலை மேலும் வளர்த்து சிறப்புறவைப்பது. நகைகளுக்குக்கூட சிவப்புக்கல் வைத்த நகையே தனி அழகுதான்.
பெண்கள் அதை விரும்பி அணிய காரணமே அதன் சிவப்பு நிறத்திற்காகத்தான். சிவப்பு நிறத்தின் அழகில் மயங்கி அவர்கள் அறியாமலே அதை வாங்க முற்படுவார்கள். (எதனால் இந்த ஆபரணம் அழகாயிருக்கிறது என்று குறிப்பிட்டு அவர்களால் சொல்லத் தெரியாது.) மொத்தத்தில் பார்க்க அழகாத் தெரியும் வாங்கிவிடுவார்கள். இது சிவப்பின் காரணமே தவிர வேறில்லை. சிவப்போடு கலந்த ‘பொன் நிறம்’ – கண்களைக் கொள்ளையடித்து அழகில் மயங்கச் செய்யும்.
சிவப்பு கல்லால்தான் நகையின் பூரணத்துவமே அடங்கியிருக்கிறது. சிவப்பு நிற ரோஜா, மற்ற வகைப் பூவினங்களும் சிவப்பில் நாம் காணும்போது நம்மை அருகே ‘வா வா’ என ஆர்வமாய் அழைத்து நம்மைச் சந்தோஷப்பட வைப்பதை நாம் நிறைய கண்டும், உணர்ந்தும் வருவது உண்மைதானே!
சிவப்பு நிறத்தின் தீமை அடுத்த மாதம்…