இன்று சாதாரண ஹோட்டல்களிலிருந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வரையிலும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டுமல்லாது பசியைத் தூண்டிவிடுகிற ரகசியத்தையும் அறிந்து ஹோட்டலுக்குள் நம்மை வரவைக்கிற தந்திரமும் அதுவே.
ஊறுகாய், ஜாம், டெமோட்டோ சாஸ், சிக்கன் கறி வகைகள், சூப் வகைகள், கேக் வகைகள், செர்ரி பழங்கள், ஐஸ் க்ரீம்களில் டூட்டி ஃப்ரூட்டி போன்ற பழங்களின் நிறங்களில் சிவப்புத்தன்மை நம்முடைய நரம்புகளைத் தூண்டி பசி உணர்வை ஏற்படுத்துகிறது, பல ஹோட்டல்களில் மேசை விரிப்புகளைக்கூட சிவப்பு நிறத்தில் உபயோகிப்பதும் இதன் காரணமே.
சிவப்பு நிறம் அதிகம் சாப்பிடச் செய்துவிடக்கூடிய வலிமையான நிறம். பசியைத் தூண்டி, டயட் கண்ட்ரோலை ஜெயித்துவிடும். டயட் கண்ட்ரோலில் இருப்பவர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் உணவைத் தவிர்க்க வேண்டும். இந்த நிறம் உணவின் மீதுள்ள ஆசையை அதிகமாக்கி அதிகம் சாப்பிடச் செய்யும்.
சில மிளகாய்களின் அதிக சிவப்பு நிறம் நம்மைச் சமையலில் இதைச் சேர்த்தால் எப்படி இருக்கும் என்ற ஓர் ஆவல் கலந்த உணர்வைத் தூண்டும். சமையலில் இதன் சிவப்பு நிறம் நம் கண்முன் வந்து நின்று நாக்கின் சுவை நரம்புகளைத் தட்டி எழுப்பும். உணவுப் பண்டங்களில் நாகரீகத்தின் காரணமாக பெரும்பாலும் கவர்ச்சியாகத் தெரிய – மக்களைக் கவர எக்ஸ்ட்ரா கலர் சேர்ப்பது அதிகரித்து வருகிறது. இது உடல் நிலையைப் பாதிக்கக்கூடியது என்றாலும், பசியோடு சாப்பிடும் ஆர்வத்தில் பலர் இதை பொருட்படுத்தாமல் ஆவல் கட்டுக்கடங்காமல் சாப்பிடவே பிரியப்படுகிறார்கள்.
இந்த முறையில் சிவப்பு நிறம் நன்மை, தீமை இரண்டிற்கும் பொதுவானது. உணவில் சிவப்பு மிளகாய் காரம் அதிகம் சேர்ப்பது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியது என்றறிந்தாலும், அதன் நிறம்தான் நம்மை ஓர் ஆர்வமுடன் சமைக்கத் தூண்டுகிறது.
புத்தகங்கள், பத்திரிக்கைகள் முதலியவற்றில் சிவப்பு எழுத்துக்கள்தான் தலைப்பு வாசகம், அல்லது அட்டை, அதன் டிசைன் முதலியவை நம்மைக் கவர்ந்து பத்திரிக்கைகளை எடுக்கத் தூண்டவல்லது. சிவப்பு நிற கவர், சிவப்பு ரிப்பன் கட்டிய பார்சல்கள், சிவப்பு துணிகள் மூடிய பொருட்கள் கண்களைக் கவருபவை. இவையெல்லாம் வியாபார ரீதியானது. வியாபாரத்தில் உடனடியாக விற்றுத் தீர்வதும் இதன் நிறத்தால்தான். சிவப்பு கலர் மூடிய துணிகளுடன் இருக்கும் புத்தகங்களோ, பொருட்களோ பார்க்கவும் சிறப்பாக இருக்கும். இவை சிறப்புக்கள் அதிகம் பெற்றவைகளாகத் திகழும் வாய்ப்புகளும் அதிகம்.
சிவப்பு நிறத்தின் நன்மை அடுத்தமாதம்…