சிவப்பு நிறத்தை விரும்பும் பெண்கள் தன் ஆட்சிதான் என கணவனை அடக்கி ஆள்பவர்களாக இருப்பார்கள். சில பெண்களுக்குத் திடீர் அதிர்ஷ்டம் வந்து சமூக அந்தஸ்து கிடைக்கும். சீக்கிரமே திருமணம் ஆனாலும், காலம் தாழ்ந்து திருமணம் ஆனாலும் பெரும்பான்மையான பெண்கள் வசதி நிறைந்த ஆஸ்தி உள்ள ஆண்களுக்கு வாழ்க்கைப்படுவார்கள். சிவப்பை விரும்பும் பெண்கள் தங்கள் திருமணத்தின்போது சிவப்பு நிற ஜரிகை வைத்த புடவையைத் திருமண நாளன்று உடுத்தினால் மிகுந்த அதிர்ஷ்டத்துடன் கூடிய வெற்றிகரமான இல்வாழ்க்கை அமையும்.
சிவப்பின் இன்னொரு நிறமான இளஞ்சிவப்பை (ரோஸ்) விரும்பும் பெண்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ள விருப்பமுடையவர்கள். கௌரவமானவர்கள். நடந்துகொள்ளும் விதத்தில் மரியாதை இருக்கும். மக்களிடையே மதிப்பு காட்டுவார்கள். இளஞ்சிவப்பு விரும்பிகளை மக்கள் குறிப்பாக குறிப்பாக இளம்பெண்களை ஒரு தேவதையைப்போல் எல்லா அம்சங்களும் பொருந்தியவள் என்று எண்ணுமளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பார்கள்.
பெரும்பாலும் மாநிறமோ, கருத்த நிறமோ, சிவந்த நிறமோ இளஞ்சிவப்பை விரும்புபவர்கள் நல்ல இலட்சணமான அழகு உடையவர்களாக இருப்பர்கள்.
இளஞ்சிவப்பை விரும்புபவர்கள் அனைவரையும் கவரும் பல சிறப்புகள் அல்லது சில சிறப்புகளையாவது பெற்றிருப்பர்.
சிவந்த நிறமுடையவர்களாக இருந்து இளஞ்சிவப்பை உடுத்துபவர்களாகவும் இருந்துவிட்டால் அவள் ஒரு தேவதை என்றே எண்ணி மற்றவர்கள் நினைக்கும்படி இந்த நிறமும் அவர்களின் உடலின் நிறமும் ஒத்துப்போய் தனிச்சிறப்பான அழகைக் கொடுக்கும்.
இளஞ்சிவப்பின் சக்தி ஒரு கவரும் தன்மையுடைய காந்தசக்தியுடையது. இவர்கள் பழக இனிமையானவர்கள் கபடமில்லாத பேச்சும், யதார்த்த குணமும் உடையவர்களாகவும் பெரும்பான்மையோர் இருப்பார்கள். சிவப்பை விரும்பும் பெண்களில் பெரும்பான்மையோர் மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருப்பார்கள். எளிதில் எதற்கும் இவர்களைத் தூண்டிவிடமுடியும். காரணம் இவர்களின் வேகமான – துணிவான மனமே.
சிலர் கோப குணம் கொண்டவர்கள். எதற்கும் சட்டென்று துணிச்சலுடன் செயல்படும் மனோபாவம் கொண்ட இவர்கள் வாழ்க்கை என்னும் ரசத்தின் ஒவ்வொரு துளியையும் துய்ப்பவர்கள். நடனத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்.
இவர்கள் சோர்ந்துபோய் மனம் வருந்தி நிற்பது அரிது.
ஆண்களை விட பெண்களுக்குக் கடவுள் பக்தி அதிகம். மூட நம்பிக்கைகளையும், நிறைய வளர்த்து வைத்திருப்பார்கள். எதற்கெடுத்தாலும் சகுனம் பார்ப்பார்கள். எப்பேர்ப்பட்ட நாகரீக பெண்மணிகளாக இருந்தாலும் தோல்வியோ துரதிர்ஷ்டமோ எதிர்படும்போது, தங்களைப் புதுப்பித்துக்கொண்டு புத்துணர்வுடனும் ஒரு அபரிமிதமான வேகத்துடனும் அதை எதிர்ப்பர்.
எதிர்காலத்திற்கென திட்டம் எதுவும் போடமாட்டர்கள். எதையும் ஒரே நாளில் சாதிக்க விரும்புவார்கள். எப்படியோ இன்று பொழுது போகும். எப்படி இருந்தால் என்ன என எதிர்விளைவுகளை யோசிக்கமாட்டர்கள். எது வந்தால் என்ன வரட்டும் என ஒரு தாந்தோன்றித்தனம் உள்ளவர்கள்.
சிவப்பை விரும்பும் பல பெண்களிடம் சோம்பேறித்தனம் மிகுந்த அளவில் இருக்கிறது. யாரிடமாவது தன் சம்பந்தப்பட்ட வேலைகளை, காரியங்களைப் பேசியே சாதிக்க விரும்புவார்கள். அல்லது வேலையாட்கள், வீட்டிற்கு வரும் சிநேகிதிகள், சொந்தக்காரர்கள் மூலம் வேலையைத் தள்ளிவிடும் சாமர்த்தியசாலிகள்.
பெரும்பான்மையான பெண்கள் தங்கள் உடல் உழைப்பைத் தாராளமாக குடும்பத்திற்குத் தராமல் எப்படியாவது இந்தக் காரியத்தை யாராவது ஏற்று செய்யத்தான் போகிறார்கள் என்பவராயிருப்பார்கள். இதனால் மற்றவர்கள் நம்மைக் கீழ்த்தரமாக கேவலமாக நினைப்பார்கள்; இது அவமானம்; பொறுப்பில்லாதவள் என்ற கெட்டபெயர் வருமே என்றெல்லாம் சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.
வெளியில் சென்று அரட்டை, பொழுதுபோக்கு அம்சங்கள், என்று சிறிது உலாவரும் பெண்கள் சிவப்பு விரும்பிகள்தாம். எங்காவது டூர், பிரயாணம் என்றால் ஆண்கள் இல்லாமலோ அல்லது குடும்பத்தாரின் அனுமதி இருந்தாலும், இல்லாமலும் கிளம்ப ஆசைப்பட்டு செல்ல எத்தனிப்பார்கள். என் வாழ்க்கையை நானே நிர்ணயித்துக் கொள்ள முடியும். எனக்கு எல்லாம் தெரியும். என் எண்ணம் எதுவோ அதுபோலவே நடப்பேன் என்று வாழ்வர். இதனால் வரும் திடீர் ஏற்றத்தாழ்வுகள் இவர்களை வாழ்க்கையில் தூக்கித் தூக்கிப் போடும். ஆனாலும், இவர்கள் தன் குணத்தால், தான் நடந்து கொள்ளும் விதத்தால்தான் தனக்கு சிக்கல்கள், பாதிப்புகள் உண்டாகிறது என்று எள்ளளவும் உணரமாட்டார்கள். யார் சொன்னாலும், ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள். அப்படியே யாராவது அலோசனை கூறினால் சிலர் அவர்கள்மேல் வெறுப்பு கொண்டு நட்பைத் துண்டித்துக் கொள்ளவும் தயங்கமாட்டார்கள்.
வியாபாரத்துறையில் சிவப்பு நிறம் பற்றி அடுத்தமாதம்…